ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பிப்.10-ல் வேலைநிறுத்தம்

0
168

தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை.

தனியார் செயலிகள் மூலம் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி குழந்தைகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் அரசுக்கு கடுமையான வரிவருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மேலும் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரோ உயர் அதிகாரிகளோ எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்த மறுக்கின்றனர்.

எனவே, 29-ம் தேதி கோவை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் முன்பும் பிப்.3-ம் தேதி நெல்லை போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பும் பிப்.5-ம் தேதி மதுரையிலும் 9-ம் தேதி திருச்சியிலும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

பிப்.10-ம் தேதி ஆட்டோகால் டாக்ஸி டூரிஸ்ட் வாகனங்கள் முழு வேலை நிறுத்தம் மற்றும் போக்குவரத்து ஆணையரகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here