Google search engine
தமிழக அரசின் நிதி​யுதவி​யுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்​பட​ விழாவை. சென்னை, ராயப்​பேட்​டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்​துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்​தார். விழாவில் அமைச்சர் பேசி​ய​தாவது:இந்தியா​வின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்​சி​யளிக்​கிறது. 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, திரைப்பட விழாவுக்கு முதன்​முதலாக நிதி​யுதவி வழங்​கினார். 2023-ம் ஆண்டு நிதியுதவியை ரூ.85...
கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளையனரேந்தல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக...
இந்த ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறி்த்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்கள்...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை...
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார். பாரதியாரின் 143-வது பிறந்தநாள் மற்றும் இந்திய மொழிகள் தினவிழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர்...
வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 1924-ல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற கோயில் நுழைவு போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பெரியார் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. அப்போராட்டத்தை நினைவுகூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது....
முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் குற்றவாளிகளை சரியாக...
மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவச் சிலைக்கு தமிழக ஆளுநர்...
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த...
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து தவறான தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்ததற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன் சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து கோரிக்கை...