தீவுத்திடலில் 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தயாநிதி மாறன் எம்.பி, சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொருட்காட்சியில்...
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும்...
பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவர் அணியினரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு நேற்று காலை அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களின் போராட்டத்துக்கு போலீஸார்...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சதீஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர், பின்னர்...
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில், கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, ஞான சேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, ஞானசேகரனின் அடுக்குமாடி வீட்டை வருவாய்த் துறையினர் நேற்று அளவெடுத்துச் சென்றனர். இந்த...
பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்
admin - 0
பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.
சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்
admin - 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கம். அந்த சமயங்களில் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு...
சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா: ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது
admin - 0
சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படுகின்றன.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது. பலூன் திருவிழாவுக்காக வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டு பறக்கவிடப்படும். இந்த நிகழ்வை காணவும்,...
2025-ம் ஆண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று பால் தினகரன் தெரிவித்தார். இயேசு அழைக்கிறார் நிறுவனம் சார்பில் புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிறுவனர் பால் தினகரன் தலைமை வகித்தார். அவரது குடும்பத்தினர் சாமுவேல் பால் தினகரன், ஸ்டெல்லா ரமோலா, டேனியல் டேவிட்சன் மற்றும் பேபி கேட்லின் ஆகியோர் கிறிஸ்துவப் பாடல்களை பாடி, கூட்டத்துக்கு வருகை தந்த ஏராளமான...










