மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரை, ஜெயலலிதா நினைவிடம் அருகில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் மோகன்,...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும்...
ஆளுங்கட்சிக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதியா? – எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்ததற்கு தலைவர்கள் கண்டனம்
admin - 0
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, ஆளுநருக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக அறிவித்து ஒரே நாளில் நடைபெறும் ஒரு நாடகப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?
பாமக தலைவர் அன்புமணி: அண்ணா...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி...
இபிஎஸ் உறவினரின் நிறுவனம் உட்பட 26 இடங்களில் ஐடி ரெய்டு: பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை
admin - 0
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் உறவினர் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் என்ற இடத்தில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,...
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், 5,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 வாரங்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் உள்ளது சோரா கிராமம். இங்கு 5,000 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு 250 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிலர் இந்த டிரான்ஸ்பார்மரை திருடி, அதன் பாகங்களை எடைக்கு போட, தனித்தனியாக பிரித்து அருகில்...
அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெரும் தொழில்களைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்துப், புதிய தொழிற்சாலைகளை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார்.
அதேநேரத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிக அளவில் தொடங்க ஊக்கமளிப்பதன் வாயிலாக, சாதாரண மக்களும் அதிக...
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால்...
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் கூட்டணி மட்டும்தான்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதி
admin - 0
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு நீதி கேட்டு, அண்ணா பல்கலை. முன்பாக அதிமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதேபோல், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மதுரவாயலில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய அதிமுகவினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸாரும், தேமுதிகவினர்...










