2024-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுகள் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் 20 இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில், தமிழ் மொழிக்கான விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், திருநெல்வேலி எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு வ.உ.சி.யின் மொத்த சுதந்திர போராட்டத்தை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி....
ஒரே நேரத்தில் 555 வர்ம சிகிச்சை நிபுணர்களை கொண்டு 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சித்த மருத்துவத்தின் வர்மமருத்துவ சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்படி, நேற்று மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு...
வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிசக்தி சேமிப்பு தின நிகழ்ச்சி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் தயாரிப்பின் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு...
மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா: மெரினாவில் துணை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
admin - 0
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா நாளை (டிச.20) தொடங்கி 24-ம் தேதி வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.
உணவுத் திருவிழாவில், கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில் உணவு வகைகள், கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி, தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி...
வலைதள பக்கத்தில் பொய் தகவலை பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான நிர்மல்குமாரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தபோது மெரினாவில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து பொய்யான தகவலைப் பரப்பியதாக அதிமுக நிரவாகியான நிர்மல்குமார் மீது சென்னை சைபர்...
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன.
பின்னர் அங்கு 9 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது....
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினராக தேர்வானவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், திமுக...
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும். அதை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும்,...
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
admin - 0
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்தும், அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது குறித்து தான் அளித்துள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த வா.புகழேந்தி, ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில்...










