அரசு கட்​டிடங்​கள் எந்த தரத்​தில் உள்ளன என்​பதை பொது​மக்​கள் தெரிந்து கொள்ள 3 வண்​ணங்​களில் ஸ்டிக்​கர் குறி​யீடு​கள் அறி​முகம் செய்​யப்​படும் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​தார். நெடுஞ்​சாலைத்​துறை மற்​றும் பொதுப்​பணித்​துறை பொறி​யாளர்​களு​ட​னான ஆய்​வுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கலந்​து​கொண்டு துறை​யின் புதிய திட்​டங்​கள் மற்​றும் சீரமைப்​புப் பணி​கள் குறித்து அதி​காரி​களுக்கு முக்​கிய ஆலோசனை​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அமைச்​சர் பேசி​ய​தாவது: தற்​போதைய தலை​மைச்...
தொடர் வேலைநிறுத்​த போராட்​ட முடிவை வங்கி ஊழியர்​கள் கைவிட வேண்டும் என மத்​திய அரசு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. பொதுத்​துறை வங்கி தொழிற்​சங்​கங்​களின் ஒருங்​கிணைந்த அமைப்பு மற்​றும் பிராந்​திய கிராமப்​புற வங்​கி​களின் தொழிற்​சங்​கங்​கள் இணைந்​து, இரண்டு முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் வேலைநிறுத்​தப் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​திருந்​தன. வாரத்​தில் 5 நாட்​கள் மட்​டுமே வங்​கிச் செயல்​பாடு​களை மேற்​கொள்​ளுதல், செயல்​திறன் சார்ந்த ஊக்​கத்​தொகை (பிஎல்ஐ) திட்​டத்தை திரும்​பப் பெறு​தல் ஆகிய கோரிக்​கைகளை சங்​கங்​கள் முன்​வைக்​கின்​றன. விரி​வான...
எஸ்​சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன் நிர்​வாக ரீதி​யாக கட்​டா​யம் விசா​ரணை நடத்த வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. திருச்சி மாவட்​டம் புத்​தாநத்​தம் பகு​தி​யில் நில ஆக்​கிரமிப்பு புகார் தொடர்​பான வழக்கை விசா​ரித்த சிறப்பு நீதி​மன்​றம், காவல் அதி​காரி​கள் கடமை தவறிய​தாகக் கூறி எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின் பிரிவு 4-ன் கீழ் எஃப்​ஐஆர் பதிவு செய்ய...
அறுபது வயது நிறைந்த அனைத்து விவ​சா​யிகளுக்​கும் ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்று தமிழ்​நாடு விவசாயிகள் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்து அச்​சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: 60 வயது நிரம்​பிய விவ​சா​யிகளுக்கு மாதம் ரூ.3ஆ​யிரம் ஓய்​வூ​தி​யம் வழங்​கும் பிர​தான் மந்​திரி கிசான் மாந்​தன் யோஜனா என்​கிற திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2 ஹெக்​டர் நிலத்​துக்கு கீழ் உள்ள விவ​சா​யிகள் மட்​டுமே இதில் இணை​ய​லாம் என வரன்​முறை உள்​ள​தால் இதர விவ​சா​யிகள்...
நட்​சத்​திர பேச்​சாளர்​கள் பட்​டியலில் இருந்து கூட்​டணி கட்​சித் தலை​வர்​களின் பெயர்​களை தவெக நீக்​கி​யுள்​ளது. தமிழகத்​தில் காலி​யாக உள்ள மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கு அக்டோபர் 6-ல் இடைத்​தேர்​தல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நிறைவடைந்​து, இறுதி வேட்​பாளர்​களும் இறுதி செய்​யப்​பட்​டு, அனல் பறக்​கும் பிரச்​சா​ரம் நடை​பெற்று வரு​கிறது. இந்த தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, நாம் தமிழர், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் என 5 முனைப் போட்டி நில​வு​கிறது. தேர்​தல்...
நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் குறை​பாடு​கள் இருப்​பின் வாட்​ஸ்​அப் எண் மூலம் புகார் அளிக்​கலாம் என்று கூட்​டுறவுத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து கூட்​டுறவுத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக விவ​சா​யிகளின் நலன் கருதி நெல்​லுக்​கான ஊக்​கத்​தொகை​யாக சன்​னரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.131-ல் இருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​தார். அதன்​படி...
‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முயன்றால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’ என மு.க.ஸ்டாலின் எச்சரித் துள்ளார். சென்னை பட்டினப்பாக் கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதியில் உள்ள அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்...
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’, 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை...
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில்...
டெங்கு காய்ச்​சலில் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழந்த சம்​பவத்தை தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​கள், மற்​றும்பல்​கலைக்​கழகங்​களை தூய்​மை​யாக வைத்​திருக்க உத்​தர​விடப்​பட்​டிருப்​ப​தாக உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார். கொரிய குடியரசின் கல்வி அமைச்​சகம், சர்​வ​தேச கல்விக்​கான தேசிய நிறு​வனம், சென்​னை​யில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்​பில் ‘ஸ்​டடிஇன் கொரி​யா’ உயர்​கல்வி கண்​காட்சி ராஜா அண்​ணா​மலை புரம் லீலா பேலஸ் ஹோட்​டலில் நேற்று நடந்​தது. 12 கொரிய பல்​கலைக்​கழகங்​கள் பங்​கேற்ற...