60 வயது நிறைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

0
22

அறுபது வயது நிறைந்த அனைத்து விவ​சா​யிகளுக்​கும் ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்று தமிழ்​நாடு விவசாயிகள் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்து அச்​சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: 60 வயது நிரம்​பிய விவ​சா​யிகளுக்கு மாதம் ரூ.3ஆ​யிரம் ஓய்​வூ​தி​யம் வழங்​கும் பிர​தான் மந்​திரி கிசான் மாந்​தன் யோஜனா என்​கிற திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

2 ஹெக்​டர் நிலத்​துக்கு கீழ் உள்ள விவ​சா​யிகள் மட்​டுமே இதில் இணை​ய​லாம் என வரன்​முறை உள்​ள​தால் இதர விவ​சா​யிகள் இத்​திட்​டத்​தில் இணைய முடி​யாது.

இத்​திட்​டத்​தில் 18 வயதில் இருந்து 45 வயதுக்​குள் தான் இணை​ய​முடி​யும். இந்​தத் திட்​டத்​தில் இணைந்த பிறகு ஒவ்​வொரு மாத​மும் ரூ.55 முதல் ரூ.200 வரை வயதுக்கு ஏற்ப இணைவோர் வைத்​துள்ள வங்​கிக் கணக்​கி​லிருந்து பிரீமிய தொகையை அரசு எடுத்​துக் கொள்ளும்.

இயற்​கையோடு போராடி எவ்​வகை இழப்பு ஏற்​பட்​டாலும் ஊருக்கு உணவளிக்​கும் விவ​சா​யிகளுக்கு ஓய்​வூ​தி​ய​மாக மாதம் ரூ.10,000 தரப்பட வேண்​டும் என 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்​தியா முழு​வதும் போராட்​டங்​கள் நடந்து வரு​கின்​றன.

எந்​தத் தொகை​யும் பெறாமல், 60 வயது நிறைந்த சிறு, குறு, பெரு விவ​சா​யிகள் அனை​வருக்​கும் அரசே இந்த தொகையை வழங்க வேண்​டுமே தவிர, சிறு சேமிப்பு திட்​டம் போல காப்​புத் தொகை பெறு​வதும், விவ​சா​யிகளிடையே பாகு​பாடு காட்​டும் வகை​யில் இத்​திட்​டத்தை அமல்​படுத்​து​வதும் நம்​பிக்கை மோசடி​யாகும்.

எனவே விவ​சா​யிகளின் நெடு​நாளைய கோரிக்​கையை ஏற்று எந்த நிபந்​தனை​யும் இன்றி மத்​திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.10 ஆயிரம் ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here