Google search engine
நீட் விலக்கு பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் "அன்னம் தரும் அமுதக்கரங்கள்" திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 19-ம் தேதி வரை 365 நாட்களும் தினமும் 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு...
வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும்...
அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழக காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வோம்’ என்ற தலைப்​பில் அரசி​யல் மாநாடு சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காங்​கிரஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மாநாட்​டுக்கு தலைமை வகித்​து, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார்....
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ எனும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த மாநாடு ‘ரெட்டிகான் 2025’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ...
தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி...
சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ...
சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை...
ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள். சில வாரங்​களுக்கு முன்பு வரை தமி​ழ​கத்​தில் திமுக, அதி​முக, பாஜக, தவெக என சிறிய கட்​சிகளுக்கு 4 வித​மான கூட்​டணி வாய்ப்​பு​கள் இருந்​தன. அது இப்​போது திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என இரண்​டாக சுருங்​கி​விட்​டது. அதி​முக, தவெக ஆப்​ஷன்​கள் இருந்​தவரை திமுக...
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன. ​தி​முக கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை உண்​டாக்க வேண்​டும் அங்​கிருக்​கும் கட்​சிகளுக்​கும் சபலத்தை உண்​டாக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே கட்​சி​யின் முதல் மாநாட்​டிலேயே போகிற போக்​கில் ‘அதி​காரத்​தில் பங்​கு’ என்று கொளுத்​திப் போட்​டார் விஜய். அது இப்​போது நன்​றாகவே பற்றி எரிய ஆரம்​பித்​திருக்​கிறது. “2026-ல் தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமை​யும்”...