Google search engine
 கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து, இந்து பட்டியலின இடஒதுக்கீட்டில் போட்டியிட்ட அதிமுக பெண் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2022 உள்ளாட்சித் தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு 8-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற...
தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருபவர் எம்.ரங்கசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இவர் தற்போது அமமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். 2011-2017 காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து சேர்த்ததாக ரங்கசாமி, மனைவி ஆர்.இந்திரா, மகன் வினோ பாரத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ரங்கசாமி வீட்டில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு...
கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். உள்கட்டமைப்பு பணிகள்: பின்னர், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்...
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர்...
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில...
சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது...
மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலம்...
கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி...
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இது...
நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் இஓஎஸ்-09 உள்ளிட்ட 6 செயற்கைக் கோள்கள் வரும் 18-ம் தேதி பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, நீர்வளம், மீன்வளம், காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள்...