“மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என சட்டப்பேரவை பதிலுரையில் முதல்வர் விஜய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்.7) காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.
முதல்வர் பதிலுரை அளிக்கையில், “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார்....
சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா பேசியது: “காவல் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில் 9,129 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதுடன் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் காவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
காவலர்களின் பணி நேரத்தை...
பணியின்போது உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வரின் 59 முக்கிய அறிவிப்புகள்
admin - 0
பணியின்போது உயிரிழக்கும் போலீஸார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு, கருணைத் தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடந்தது.
முன்னதாக இத்துறைகள் குறித்து 59 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: போதைப் பொருள் பயன்பாட்டை திறம்பட ஒழிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கும் வகையில், தலா ரூ.10 லட்சம்...
தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்
admin - 0
தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாகனத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் காயமடைந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி முதல்வர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நேற்று காலை சென்றார்.
அப்போது அவரது வருகைக்காக நுழைவு வாயில் எதிரே நூற்றுக்கும்...
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2 நாட்களில் மட்டும் 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக்கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாகச் சாடியிருந்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
திருவொற்றியூரில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை கண்டித்த தம்பிக்கு பதில் அண்ணன் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர், சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகீஸ்வரன் (34). இவரது தம்பி சுனில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக கல்லூரி மாணவி ஒருவருடன் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த...
திமுக ஆட்சியில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு
admin - 0
‘‘கடந்த திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற மே 10-ம் தேதி முதல், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற...
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலை கோயில்களில் கடந்த 1-ம் தேதி முதல் செல்போன்களை எடுத்துச் செல்வ தற்கான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுன்ட்டர்கள் மற்றும் லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் ஒன்றுக்கு ரூ.5 என்ற குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக...
செப்.15-ம் தேதி முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று: முதல்வர் விஜய் அறிவிப்பு
admin - 0
டிஜிட்டல் முறையிலான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவை செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தற்போது ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று பெறுவதற்கு கட்டணமாக ரூ.250 விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு...
தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவிக்க டிஜிட்டல் தளம்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவிப்பு
admin - 0
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் கமலி பேசியதாவது: செட்டிநாடு, நடுவூர், சின்னசேலம் அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்பு பிரிவுகள் நிறுவப்பட்டு புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.70 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படு்ம். கோழிப்பண்ணைகளுக்கு நோயை கண்டறிதல் தொடர் கண்காணிப்பு அவசியம் என்பதால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.30 கோடி...









