Google search engine
அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும்...
டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான...
யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு...
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை தடை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரி பொது நலன் மனுவை (பிஐஎல்) தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: நாட்டில் ஏராளமான சட்டவிரோத சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. செல்போன் வழியாக செயல்படும் இந்த அனைத்து பெட்டிங் செயலிகளும் சூதாட்ட சட்டங்கள்...
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில், 4 மாவோயிஸ்ட்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், கட்சிரோலி மாவட்டம் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், போலீஸ் சிறப்பு கமாண்டோ குழு சி-60 பிரிவினர், சிஆர்பிஃஎப் வீரர்கள் நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்த...
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாட்டிசெர்லமாடு எனும் கிராமத்துக்கு அருகில் நேற்று காலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் பாபட்லா மாவட்டம், ஸ்டுவர்டிபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், கர்னூல் அருகே உள்ள மகாநந்தி கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சொந்த...
உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா நேற்று தனது கடைசி பணி நாளில் 11 தீர்ப்புகளை வழங்கினார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா இன்று (மே 24) பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கடந்த புதன்கிழமை பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதேநாளில் மும்பையில் அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காலமானார். இதையடுத்து மும்பை சென்ற ஓகா, நேற்று முன்தினம் தனது...
 நாட்டில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 3 ஆக உயர்ந்தது. விசாகப்பட்டினம், மத்துலபாளையம் பகுதியில் 28 வயது பெண் ஒருவருக்கும் நந்தியாலா மாவட்டம், சீகலமர்ரி...
ஆந்திர மாநில நிதித்துறை கட்டிடத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர்கள், சில முக்கிய ஆவணங்கள் கருகியதாக தெரியவந்துள்ளது. அமராவதியின் மங்களகிரி பகுதியில் ஆந்திர மாநில முதன்மை நிதித்துறை அலுவலகமான ‘நிதி பவன்’ உள்ளது. இங்கு நேற்று காலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த 6 அடுக்கு கட்டிடத்தின் 4 மற்றும் 5-வது தளங்களில் சென்ட்ரல் ஏசியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. உடனே மளமளவென தீ...
நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பி வருகிறது. வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாடு முழுவதும் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணியை ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்...