ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இந்த மூவரும்...
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் (90) மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த வர் சிவராஜ் பாட்டீல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2 முறை எம்எல்ஏவாக இருந்தபோது, முதலில் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தேசிய அரசியலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறையாக லாத்துார்...
ஆந்திராவில் தனியார் சுற்றுலா பேருந்து மலைச்சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணிகள் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 35 பேர் தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் ஆந்திராவின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அன்னவரம் சத்யநாராயண சுவாமியை தரிசித்து விட்டு, அங்கிருந்து பத்ராச்சலம் ராமரை தரிசிக்க...
சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.
கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய டெல்லி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி சில மாதங்களுக்கு முன்பு 19 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு...
இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,...
சத்தீஸ்கரில் 6 பெண்கள் உட்பட 10 நக்சலைட்கள் நேற்று சரண் அடைந்தனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் நேற்று கூறியதாவது:
அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில் நக்சலைட்கள் சரண் அடைந்தனர். இவர்களை பற்றிய தகவலுக்கு மொத்தம் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் மனு அளித்ததற்கு 56 முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு
admin - 0
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் மனு அளிக்கப்பட்டிருப்பதற்கு 56 முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடந்த 9-ம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று...
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டு குறித்த எனது செய்தியாளர் சந்திப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வருமாறு அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவர் தவறான...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்றார்.
இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்பட்டார். 2022 ஜூலையில் குடியரசுத் தலைவராக முர்மு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மணிப்பூருக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, மணிப்பூரின் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சேனாபதி மாவட்டத்துக்கு...
தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.
டெல்லியில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிஹாரில் நடைபெற்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த விருந்து நடைபெற்றது.
பொறுப்புணர்வுடன் மக்களுக்கு பணியாற்றுமாறு விருந்தில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு...
