ஆந்திர அரசின் ‘ஸ்வர்னாந்திரா’ தொலைநோக்கு திட்டம் 2047: பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை காண முதல்வர் தலைமையில் சிறப்பு பணிக் குழு
admin - 0
ஸ்வர்னாந்திரா தொலைநோக்கு திட்டம் 2047-ன் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கான வழியைக் காண முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆந்திராவின் விரைவான வளர்ச்சிக்காக ஸ்வர்னாந்திரா தொலை நோக்கு திட்டம் 2047, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம், பால்வளம், மீன்வளம், தோட்டக்கலை, தொழில்துறை, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சேவைத் துறைகள் மற்றும் தகவல்...
பாக். போர் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விளக்கிவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை
admin - 0
வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில்...
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி...
இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் - எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன...
கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்...
ஒரு புதிய பாரதம் உருவாகிறது - இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார்.
ஹரியானாவில்...
மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம்...
இந்தியர் சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்சியம்-4 ஏவுதல் மீண்டும் தள்ளிவைப்பு – காரணம் என்ன?
admin - 0
இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A...
படியில் தொங்கி சென்றதால் விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து மும்பையில் 5 பேர் உயிரிழப்பு
admin - 0
மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் (சிஎஸ்எம்டி) இருந்து தானே மாவட்டம் கசரா நோக்கி நேற்று காலை 9 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டு சென்றது. முதல் வேலை நாள், அலுவலக நேரம் என்பதால் ரயிலில்...
ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக், பட்டம் முடித்தவர். . இவர் காலஹந்தி மாவட்டத்தின் தரம்நகர் துணை ஆட்சியராக உள்ளார். உள்ளூர் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக துணை ஆட்சியர் திமான் ரூ.20...
முன்னாள் மத்திய அமைச்சரும் பிஹாரின் மறைந்த தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தொடங்கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இவர், மத்தியில் எந்த கட்சி தலைமையில் ஆட்சி வந்தாலும் கூட்டணி வைத்து அமைச்சராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்வான், தற்போது பாஜக தலைமையிலானக் கூட்டணியில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆராவில் நேற்றுமுன்தினம் எல்ஜேபி மாநாடு நடைபெற்றது. அப்போது எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பேசுகையில், ‘‘நான் சட்டப்பேரவை...










