ஆந்திர அரசின் ‘ஸ்வர்னாந்திரா’ தொலைநோக்கு திட்டம் 2047: பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை காண முதல்வர் தலைமையில் சிறப்பு பணிக் குழு

0
34

ஸ்வர்னாந்திரா தொலைநோக்கு திட்டம் 2047-ன் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கான வழியைக் காண முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆந்திராவின் விரைவான வளர்ச்சிக்காக ஸ்வர்னாந்திரா தொலை நோக்கு திட்டம் 2047, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம், பால்வளம், மீன்வளம், தோட்டக்கலை, தொழில்துறை, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சேவைத் துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு, கல்வி, திறன் மேம்பாடு என 10 முக்கிய துறைகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.

இத்துறைகளில் வளர்ச்சிக்கான வழிகளை கண்டறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக் குழு அமைத்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது. இதில் துணைத் தலைவராக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி, அபோலோ மருத்துவமனையின் நிர்வாக செயல் தலைவர் ப்ரீத்தா டெ்டி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுசித்ரா எல்லா, மொசா பின்ட் நாசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் ரெட்டி, டாக்டர் ரெட்டீஸ் லேபோரேட்டரீஸ் நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி, ஜிஎம்ஆர் குழும தலைவர் ஜி.எம்.ராவ், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன், டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஆகியோர் இந்த சிறப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந் திராவில் விரைவான வளர்ச்சிக்காக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த முக்கிய துறைகள், மாற்றத்துக்கான மாநில அரசின் கொள்கை பாதையை பிரதிபலிக் கின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here