பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் இதயநோய் மருத்துவர் திரேந்திர சிங்கானியா கூறியதாவது: மாரடைப்பு அபாயத்திற்கு ஸ்டீராய்டுகள், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் (குறிப்பாக பெண்களுக்கு) காரணங்களாக உள்ளன. பிரபலமாக இருந்தாலும் சரி,...
கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய பிரதேசம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரியம் சரஸ்வத் நேற்று முன்தினம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
யூ...
மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு
admin - 0
மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங் குணாவத் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பூல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்சனா பானு என்பவர் கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
மதமாற்றம் செய்யவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவும்...
மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில் கடந்த ஏப்ரலில் மும்மொழி கொள்கை அமல் செய்யப்பட்டது.
இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 3-வது கட்டாய மொழி பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று...
தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி,...
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: அபுஜ்மாத்தில் உள்ள கோகமெட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து புதன்கிழமை மாலை நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
மாவோயிஸ்ட்களின் மாட் பிரிவின் மூத்த போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தேடுதல்...
உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிராமணர் என பொய் கூறி மோசடி செய்ததாகவும் இரு வழக்குகள் பதிவாகி உள்ளன.
உ.பி.யின் அவுரய்யா நகரை சேர்ந்த முகுந்த்மணி சிங் யாதவ், கடந்த 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இவர், ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதாகாலட்சேபங்களில் பிரபலமானவர்.
இவர், எட்டாவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்துக்கு கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார்....
அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவை கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின்...
இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை பாதிப்பு, விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. இமாச்சல பிரதேசத்தில் மணாலி, ஜீவா நல்லா, ஷிலாகர், ஸ்ட்ரோ, ஹோரன்கர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளின் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இமாச்சலின் தரம்சாலா பகுதி, கன்னியாரா கிராமத்தில் நீர்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள்...
எமர்ஜென்சி காலத்தில் நான் ஒரு இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி, இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
சுமார் 2 ஆண்டுகள் அவசரநிலை நாட்டில் அமலில் இருந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நேற்றுடன், 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில் புளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற அமைப்பு, எமர்ஜென்சி...










