உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள காணொலியில், "இது மாற்றத்தின் ஒரு புதிய தொடக்கமாகும். இந்த புதிய சுழற்சியில், உலக அரங்கில் இந்தியா தனது...
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக நாளை நடைபெறவுள்ள சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்கிறார்.
இந்தியா–சீனா இடையிலான 3,488 கி.மீ. நீள எல்லையை உள்ளடக்கிய சிக்கலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, இருதரப்பு சிறப்புப் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதன்படி அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்தியா...
கேரளாவின் குருவாயூர் தேவசம் வாரியத் தலைவர் ஏ.வி. கோபிநாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடைபெற்றன. கோயில் வரலாற்றில் இவ்வளவு அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடைபெற்றது இதுவே முதல்முறை. திருமணங்கள் நடைபெறும் இந்த மங்களகரமான நிகழ்வுக்கு பொதுமக்கள் மிகுந்த ஆதரவு அளித்தனர்.
திருமணங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட...
மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் அந்த மருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட தகவலின் படி அந்த வார்டில் இருந்த வென்டிலேட்டர் வெடித்தது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஓராண்டுக்கு சோதனைகளை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு நாடு தழுவிய 24 சிறப்புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு...
கற்கள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது....
ஐபோன் தவணை செலுத்த முடியாததால் 18 வயது இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்ற பெற்றோரும் உயிரிழந்த சோகம்
admin - 0
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவ்டியா மலைப் பகுதியில் தற்கொலை செய்ய முயன்ற மகனை காப்பாற்ற முயன்ற பெற்றோர் உட்பட மூவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த 18 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர், அண்மையில் தவணை முறையில் புதிய ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கான மாதத் தவணையைக் கட்டுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும்...
விசாகப்பட்டினத்தில் உள்ள ‘லிட்டில் கார்டன்’ தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில், 6 வயது சிறுவன் பிரணய் தேஜா வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் காலை ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற பிரணய், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியையால் கண்டிக்கப்பட்டு அடிக்கப்பட்டார். பயத்திலும் அதிர்ச்சியிலும் கதறி அழுத சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே குப்புற மயங்கி விழுந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இணையத்தில் வெளியாகின.
உடனடியாக...
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 24 முதல், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி புதிய சிம்கார்டு பெற முயலும் ஒவ்வொரு சந்தாதாரரையும் அடையாளம் காணும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வரம்பை எட்டிய வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் மத்திய அரசின் டிஜிட்டல் புலனாய்வு தளத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல்...
திருத்தப்பட்ட மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை தாக்கல் செய்த கர்நாடகா – 8.90 லட்சம் மரங்களை வெட்ட முடிவு
admin - 0
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்டமுடிவெடுத்துள்ளது.
இதனை தமிழக அரசு எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதற்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான திட்ட...










