கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோடினி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் காரணமாக கோடினி கிராமம், இரட்டையர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இரு குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்....
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு...
உத்தர பிரதேசம் லக்னோவில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளார்.
உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் அசோக் பாஹர்(71). உத்தராகண்டில் உள்ள இந்திய மருந்துள் நிறுவனத்தில் (ஐடிபிஎல்) மார்க்கெட்டிங் பிரிவு தலைவராகவும், வெளியுறவுத்துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி டாக்டர். மஞ்சு பாஹர் மகப்பேறு மருத்துவர்.
அசோக் பாஹரின் தந்தையும் லக்னோவில் பிரபல மருத்துவராக இருந்தவர். அதனால் இவரும் மருத்துவராக வேண்டும்...
கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின்...
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை அழித்தோம்: முதலாம் ஆண்டு நிறைவு நாளில் விமானப் படை தகவல்
admin - 0
‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள், 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தது’’ என்று விமானப்படை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று...
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
"கேரளாவில் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களம் கண்ட இடதுசாரி முன்னணிக்கு இந்தத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த தோல்வி முழு வியப்பையும் பேரதிர்ச்சியையும் அளித்துள்ளது. தேர்தல் பின்னடைவை ஒப்புக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
சட்டமன்றத்தில் இடதுசாரி முன்னணி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படும். சமூக நலத்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் நகரங்களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக திட்டமிட்டு கலவரங்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்துவதாக முதல்வர் பகவந்த் மான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சக், முதல்வர் பகவந்த் மானுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது...
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம்: மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது.
இதுபோன்ற சர்ச்சைகளின் போது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. கடந்த 1994-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஒரு ஆட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை சட்டப்பேரவையில்தான் அறிய முடியும். ஆளுநர் மாளிகையில் இல்லை. பெரும்பான்மை ஆதரவு...
முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்...
கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்திற்கும் அதிகமாக பக்தர்களின் கூட்டம் உள்ளது. அதுவும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், கூட்டம் மேலும் அதிகரித்தது.
இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோடை காலத்தில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...










