தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம்: மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்

0
16

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலை​வர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர்​ அர்​லேக்​கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது.

இது​போன்ற சர்ச்​சைகளின் போது, எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பே பெரிதும் விவா​திக்​கப்​படு​கிறது. கடந்த 1994-ல் வழங்​கப்​பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்​பில், ஒரு ஆட்​சிக்​குப் பெரும்​பான்மை ஆதரவு உள்ளதா என்​பதை சட்​டப்​பேர​வை​யில்​தான் அறிய முடி​யும். ஆளுநர் மாளி​கை​யில் இல்​லை. பெரும்​பான்மை ஆதரவு உள்​ளதா என்​ப​தை, ஆளுநர் தனது தனிப்​பட்ட விருப்பு வெறுப்​பு​களின் அடிப்​படை​யிலோ அல்​லது சொந்​தக் கணிப்​பின் அடிப்படையிலோ தீர்​மானிக்க இயலாது என்று உறு​திபடக் கூறியிருந்​தது.

அதன்​பின்​னர், பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் விவ​காரத்​தில் சட்​டப்​பேர​வை​யில் வாக்​கெடுப்பு நடத்தி முடிவு எடுப்​பது என்றானது. நம்​பிக்கை வாக்​கெடுப்பு இந்​திய அரசி​யலில் ஒரு அரசியலமைப்பு மரபாக மாறியது. பிறகு கர்​நாட​கா, மகாராஷ்டிரா, உத்​த​ராகண்ட் மற்​றும் மத்​திய பிரதேசம் போன்ற பல வழக்​கு​களில், உச்ச நீதி​மன்​றம் பொம்மை தீர்ப்பை மேற்கோள் காட்​டி, உடனடி நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்த உத்தர​விட்​டதும் நடந்​தேறின.

இதற்கு பல முன் உதா​ரணங்​கள் உள்​ளன. கடைசி​யாக மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 2019-ல் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக தனிப்பெரும் கட்​சி​யானது. அப்​போது, சிவசே​னா​வில் உரு​வானப் பிளவு பாஜக கூட்​ட​ணி​யின் பெரும்​பான்​மைக் கணக்​கீடு​களைக் குழப்​பியது. எனினும் தேவேந்​திர பட்​னா​விஸ் மற்​றும் அஜித் பவார் ஆகியோர் திடீரென பதவி​யேற்​றனர்.

தங்​களுக்கு என்​சிபி​யின் ஆதரவு இருப்​ப​தாக இவர்​கள் கூறியதை எதிர்க்​கட்​சிகள் எதிர்த்​தனர். உச்ச நீதி​மன்​றம் உடனடி​யாக நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்த உத்​தர​விட்​டது. ஆனால், பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்கு முன்பே பாஜக கூட்​டணி அரசு கவிழ்ந்​தது. பின்​னர், சிவசேனா – காங்​கிரஸ் – என்​சிபி கூட்​டணி அரசு அமைந்தது.

அதற்​கும் முன்​பாக 2018-ல் கர்​நாடக தேர்​தலில் 112 பெரும்​பான்மைக்​கு,104 தொகு​தி​களு​டன் தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்​தது பாஜக. இக்​கட்​சி​யின் எடியூரப்பா அரசு அமைக்க அழைக்​கப்​பட்​டார். அப்​போது, காங்​கிரஸும் ஜேடிஎஸ் கட்​சி​யும் கூட்​டணி அமைத்து பெரும்​பான்மை உள்​ள​தாக கூறியது. உச்ச நீதி​மன்​றத்தை எட்​டிய இந்த வழக்​கில், நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டது.

அதில், பெரும்​பான்​மையை நிரூபிக்க முடி​யாத​தால், எடியூரப்பா பதவி விலக வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. கோவா​வில் 2017-ல் காங்​கிரஸ் 17 தொகு​தி​களு​டன் தனிப்​பெரிய கட்​சி​யானது. பாஜகவிடம் 13 இடங்​கள் மட்​டுமே இருந்​தன. அத்​துடன், பிராந்​திய கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகளின் ஆதரவை பாஜக விரை​வாகப் பெற்​றது.

இச்​சூழலில் ஆளுநர், காங்​கிரஸுக்​குப் பதிலாக பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்​தார். முதல்​வ​ரான மனோகர் பாரிக்​கருக்கு காங்​கிரஸ் எதிர்ப்பு தெரி​வித்​தது. ஆனால், பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான களம் சட்​டப்​பேர​வை​தான் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்​பளித்​தது. மணிப்​பூரில் 2017-ல் காங்​கிரஸ் தனிப்​ பெரும் கட்​சி​யான நிலை​யில், பாஜக சிறிய கட்​சிகளின் ஆதர​வைத் திரட்டி பெரும்​பான்மை பெற்​றது.

அப்​போது பாஜக​வின் என்​.பிரேன் சிங்கே ஆட்சி அமைக்க அழைக்கப்​பட்​டார். ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 2005-ல் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்மை பெற்​ற​தாகக் கூறியது. ஆனால், சிபு சோரனுக்கு அரசு அமைக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. உச்ச நீதி​மன்​றம் சென்ற இந்த வழக்​கிலும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு மூலம் தீர்க்​கப்​பட்​டது.

எனவே, இதர மாநிலங்​களில் அமைந்த ஆட்​சிகளை முன் உதா​ரண​மாகக் கொண்​டால், இறு​திச் சோதனை​யாக அமைவது எஸ்.ஆர்​.பொம்மை வழக்​கின் தீர்ப்​பே. இந்​தச் சூழ்​நிலை​யில், ஒரு அரசுக்கு பெரும்​பான்மை உள்​ளதா என்​ப​தை சட்​டப்​பேர​வை​யில்​ தான்​ தீர்​மானிக்​க முடி​யும்​ என்​பது சட்​ட ரீதி​யாக உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here