“தங்க இறக்குமதி சார்ந்து அதிகளவிலான தொகையை நம் தேசம் செலவிடுகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போடலாம்” என்று பிரதமர் மோடி மீண்டும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக உலகமே அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது. முதலில் கரோனா பெருந்தொற்று, அதன் பின்னர் சர்வதேச அளவில் ஏற்பட்ட...
நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா சர்மா, “மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக எரிசக்தி விநியோகத்தில் சர்வதேச அளவில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனால், சர்வதேச சந்தையில்...
பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது, வாகன அணிவகுப்பு பெங்களூரு புறநகர் பகுதியான நைஸ் ரோடு (NICE Road)...
வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு...
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் புதுப்பிக்கப்பட்டு 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தில் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால்...
அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார்.
அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து,...
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இது தொடர்பாக கோகினூர் மஜும்தார், ரிஜு தத்தா மற்றும் கார்த்திக் கோஸ் ஆகியோருக்கு கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும், தொடர்ச்சியாகக் கட்சி விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதாலும் அவர்கள் மூவரும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஷம்சுதீன், அவரது சகோதரர் இக்பால் கெடாவாலா மற்றும் இரு கூட்டாளிகளுடன் இணைந்து பர்சானாவைக் கொலை செய்துள்ளனர். அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக அந்தக் குடும்பத்தினர் குற்ற உணர்ச்சியாலும், கொல்லப்பட்ட பெண்ணின் நிழல் தங்களைத் துரத்துவதாக ஏற்பட்ட மாயை யாலும் கடும் பீதியில் இருந்துள்ளனர்.
அந்த ஆவியிடமிருந்து விடுபட அவர்கள்...
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், "போதைப் பொருள் வர்த்தகத்தில்...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.
இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற...










