Google search engine
நாடு முழுவதும் உள்ள பல்​வேறு மாநிலங்​களில் 2 கட்டங்களாக வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் (எஸ்​ஐஆர்) ஏற்​கெனவே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இந்நிலை​யில், 3-வது கட்​ட​மாக எஞ்​சிய 16 மாநிலங்​கள் மற்​றும் 3 யூனியன் பிரதேசங்​களில் இந்த பணி​கள் தொடங்​கப்பட உள்ளதாக தேர்​தல் ஆணை​யம் நேற்று தெரி​வித்​துள்​ளது. இருப்பினும், இமாச்​சலப் பிரதேசம், ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் ஆகிய பகு​தி​களில் தற்​போதைக்கு எஸ்ஐஆர் பணி​கள் நடைபெறாது என்​ப​தை​யும் தேர்​தல் ஆணை​யம் தெளிவுபடுத்தியுள்​ளது. இதுகுறித்து...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்தலில் பதிவான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்கப்பட்​டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்​துள்​ளது. முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவியேற்​றுள்​ளார். இந்​நிலை​யில் தேர்​தலுக்​குப் பின்​னர் மேற்கு வங்​கத்​தின் பல பகுதி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​தன. மேலும் திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வல​கத்​தின் மீது பாஜக தொண்​டர்​கள் தாக்​குதல் நடத்தி தீவைத்​தனர் என்​றும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக திரிண​மூல்...
கேரள மாநிலத்​தில் உள்ள சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிப​தி​கள் பி.வி நாக ரத்​தி​னா, எம் எம் சுந்​தரேஷ், ஏ.அமானுல்​லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்​லே, ஆர். மகாதேவன், ஜோய்​மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 16-வது நாள்...
 வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை...
அமெரிக்க – ஈரான் போர் காரண​மாக பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களை சிக்​க​ன​மாக பயன்​படுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்​வைத்​தார். அதன்பின், பிரதமர் மோடியே முன்​னு​தா​ரணமாக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 4 ஆக குறைத்துள்ளார். மேலும் தனது பயணத்​தில் மின்​சார வாகனங்களை அதி​கரிக்க பிரதமர் உத்​தர​விட்​டுள்​ளார். இதுபோல் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங்​கும் பாதுகாப்பு வாக​னங்​களை...
மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச் பாதிரியார்கள், சுராசந்த்பூர் மாவட்டம் லம்கா பகுதியில் ‘தடோவ் பேப்டிஸ்ட் அசோசியஷன்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் 2 வாகனங்களில் பாதிரியார்கள் மீண்டும் காங்போக்பிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடையாளம்...
மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்​கில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய பெண் ஊழியர்​களுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக​வும் மத மாற்​றம் செய்ய முயன்​ற​தாக​வும் புகார் எழுந்​தது. இந்த விவ​காரத்​தில் அதன் ஊழியர் நிடா கானுக்கு முக்​கிய பங்கு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. தலைமறை​வாக இருந்த நிடா கான் கடந்த மே 7ம் தேதி சத்​ரபதி சம்​பாஜி நகரில் (அவுரங்​கா​பாத்) கைது செய்​யப்​பட்​டார். அவருக்கு ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யைச் சேர்ந்​தவரும் சத்​ரபதி சம்​பாஜி நகர்...
ஆன்​லைன் மருந்து விற்​பனையைத் தடை செய்ய கோரி, மே 20-ம் தேதி நாடு தழு​விய அளவில் மருந்​தகங்​கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. சுமார் 12.4 லட்​சம் மருந்​தகங்​கள் இந்த வேலைநிறுத்​தத்​தில் ஈடுபடக் ​கூடும் என்​ப​தால் நாடு முழு​வதும் மருந்து விநி​யோகம் பாதிக்​கப்​படும் என தெரிகிறது. இது தொடர்​பாக அகில இந்​திய மருந்தக உரிமை​யாளர்​கள் மற்றும் விற்​பனை​யாளர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ள​தாவது: முறைப்​படுத்​தப்​ப​டாத ஆன்​லைன் மருந்து விற்​பனை​யால் நோயாளி​களின் பாது​காப்​புக் குப் பெரும் அச்​சுறுத்​தல்...
கேரள முதல்​வ​ராக கே.சி.வேணுகோ​பாலை நியமித்தால், வயநாடு அமே​தி​யாக மாறும் என்ற வாசகங்​கள் அடங்​கிய போஸ்​டர்​கள் வயநாடு தொகு​தி​யில் ஒட்​டப்​பட்​டுள்​ளன. கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி வெற்றி பெற்​றது. இதன்​மூலம் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு இக்​கூட்​டணி ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. தேர்​தல் முடிவு வெளி​யாகி 10 நாட்​களாகி​யும் இன்​னும் முதல்​வரை தேர்ந்​தெடுப்​ப​தில் இழுபறி நீடிக்​கிறது. குறிப்​பாக, கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், மூத்த தலை​வர்​களான வி.டி.சதீசன்,...
குஜ​ராத்​தின் சோம்​நாத் கோயில் குட​முழுக்கு நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று சிறப்பு பிரார்த்​தனை​களை நடத்​தி​னார். குஜ​ராத்​தின் கிர் சோம்​நாத் மாவட்​டத்​தில் அமைந்​துள்ள சோம்நாத் கோயில், முன்​னாள் குடியரசு தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத், சர்​தார் படேல் உள்​ளிட்​டோ​ரால் புதுப்​பிக்​கப்​பட்டு கடந்த 1951-ம் ஆண்டு திறக்​கப்​பட்​டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி சோம்​நாத் கோயி​லில் நேற்று குட​முழுக்கு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி...