மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநிலத்தில் 2,200 கி.மீ. நீளமுள்ள எல்லையில் மீதமுள்ள 600 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கும் பணிகளை வலுப்படுத்துவதற்காக, 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) தலைமை இயக்குநருக்கும், மாநில அரசுக்கும் இடையே அடுத்த சில வாரங்களில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு...
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே விவசாயிகளும்,...
நீட் 2026 வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகராஷ்டிராவின் பயிற்சி நிலைய உரிமையாளர், கடந்த ஆண்டு 2025 வினாத்தாளையும் கசிய வைத்து ரூ.1,500 கோடி சம்பாத்தித்ததாக கூறப்படுகிறது?
மகராஷ்டிரா மாநிலம், லாத்தூர் நகரில் 'ரேணுகா கேரியர் சென்டர்' எனும் பெயரில் நீட் பயிற்சி நிலையம் உள்ளது. இதன் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர், இதுபோல் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
பிறகு, தானே...
“மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” – பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம்
admin - 0
மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கிறார் என்று ராகுல் கூறியுள்ளார்.
உ.பி.யின் ரேபரேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: வெளிநாடு செல்லாதீர்கள், தங்கம் வாங்காதீர்கள், மின்சார வாகனங்களை வாங்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் அவரே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள...
வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில்...
உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கில், 'பூஜ்ஜிய சகிப்புத் தன்மை' கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில், 34,253 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வராக யோகி பதவி ஏற்றது முதல் இன்று வரை உபி காவல்துறை மொத்தம் 17,043 என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளது....
இந்திய ஊடக சுதந்திரம் குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி: மத்திய வெளியுறவு அமைச்சகம் காரசார பதில்
admin - 0
பிரதமரின் சுற்றுப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்புகளில் கேள்வி-பதில் நேரங்கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்திப்பின்போது, இரு தலைவர்களும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்பிய பிறகு, நார்வே பிரதமர் அந்நாட்டு ஊடகங்களிடம் தனியாகப் பேசினார். இதுகுறித்துப்...
கர்நாடக மாநிலம் குடகில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மார்த்தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் நேற்று முன்தினம் மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் இரு யானைகளும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டதில் காயமடைந்தன.
இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய சென்னையை சேர்ந்த சுற்றுலா...
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்தவர் முகமது உஸ்மான் ஜாட். இவர் லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத பயிற்சி பெற்று காஷ்மீருக்குள் நுழைந்தார். அவர் இங்கு வந்தபின், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை அவருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தீவிரவாத முகாம்களில் காஷ்மீர் பற்றி தங்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை உணர்ந்தார்.
இதனால் அவரது மனம் தீவிரவாதத்தை பரப்பும் செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் அவருக்கு தலையில் விழுந்த வழுக்கை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இதனால்...










