வெறிநோய் மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதில்...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி கடந்த 14-ம் தேதி பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில்...
உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கில், 'பூஜ்ஜிய சகிப்புத் தன்மை' கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில், 34,253 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வராக யோகி பதவி ஏற்றது முதல் இன்று வரை உபி காவல்துறை மொத்தம் 17,043 என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளது....
இந்திய ஊடக சுதந்திரம் குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி: மத்திய வெளியுறவு அமைச்சகம் காரசார பதில்
admin - 0
பிரதமரின் சுற்றுப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்புகளில் கேள்வி-பதில் நேரங்கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்திப்பின்போது, இரு தலைவர்களும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்பிய பிறகு, நார்வே பிரதமர் அந்நாட்டு ஊடகங்களிடம் தனியாகப் பேசினார். இதுகுறித்துப்...
கர்நாடக மாநிலம் குடகில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மார்த்தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் நேற்று முன்தினம் மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் இரு யானைகளும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டதில் காயமடைந்தன.
இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய சென்னையை சேர்ந்த சுற்றுலா...
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்தவர் முகமது உஸ்மான் ஜாட். இவர் லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத பயிற்சி பெற்று காஷ்மீருக்குள் நுழைந்தார். அவர் இங்கு வந்தபின், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை அவருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தீவிரவாத முகாம்களில் காஷ்மீர் பற்றி தங்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை உணர்ந்தார்.
இதனால் அவரது மனம் தீவிரவாதத்தை பரப்பும் செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் அவருக்கு தலையில் விழுந்த வழுக்கை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இதனால்...
தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:...
ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில் மே 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை மாநில அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் கர்வா மாவட்டம், துர்கி ஒன்றியம் தட்டிதிரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்...
கர்நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயிரிழந்தார். கணவரின் கண் முன்னால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றார். இங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் மடிகேரியை...










