Google search engine
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை சமாளிக்க, பாஜக கூட்டணியின் சார்பில் களமிறக்கப்பட்ட குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய‌மூன்று முன்னாள் முதல்வர்களும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர். ஹாவேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளர் கட்டாதேவர்மத்தை 43ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஷிகோன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை...
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உத்தர பிரதேசத்தின் மகராஜ்கன்ஜ், பன்சி, மீரட், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதுபோன்ற ஜனநாயக இடையூறை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டுவதாக ஏற்கெனவே ஜெய்ராம் ரமேஷ்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளனர். இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த...
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில் கூட்டமைப்பு (என்பிஓ) ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரம்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள ஏவுகணை மையத்தில் 4 ஆண்டாக பொறியாளராக பணியாற்றினார் நிஷாந்த் அகர்வால். ஏவுகணை தொழில்நுட்ப ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு (ஐஎஸ்ஐ) வழங்கியதாக நிஷாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2018-ம்ஆண்டு நிஷாந்த் கைது செய்யப்பட்டார்....
நாடு முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பே மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்ட சந்தை தொடங்கிவிட்டது. குறிப்பாக, டெல்லியில் உள்ளசூதாட்டக்காரர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 341 முதல் 343 இடங்கள் கிடைக்கும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 198 முதல் 200 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தனியாக 310 முதல் 313இடங்களிலும் காங்கிரஸ் தனியாக 57 முதல் 59 இடங்களிலும் வெற்றி பெறும்...
தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த 53 வயது நபர் ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்றும், 'மனதார சிரிப்பவர்களின் ஆயுள் நீடிக்கும்' என்றும் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த ஷியாம் (53) என்பவர், தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்துள்ளார். அப்போது சிரிப்பை...
எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகிலிருந்து முற்றிலும் விலகியது. இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் சவாலானதாக மாறுகிறது, ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதிமற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின்...
ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா நேற்று அமராவதியில் கூறியதாவது: ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணி முதல் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாவதை முன்னிட்டு ஆந்திராவில் 25 கம்பெனி துணை ராணுவப் படையினர்...
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 130 – 160 இடங்கள் வரையில் வெல்லும் என்றும் பல்வேறு ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. பிரபல தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர், இந்த முறைபாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 2019 தேர்தல் பெற்ற இடங்களை பெறும் அல்லது அதைவிட கூடுதல்இடங்களில் பாஜக வெல்லும் என்று தெரிவித்து...
 உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில், ஊர்க் காவல் படையினர், துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். வாக்காளர் உயிரிழப்பு: பலியா மக்களவை தொகுதியின் சிக்கந்தர்பூர் பகுதியில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்காக வரிசையில் நின்ற...