ரூ.86 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த பில்லால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டெய்லர் அதிர்ச்சி அடைந்தார்.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள சோர் கலி பகுதியில் நியூ பேஷன் டெய்லர் என்ற பெயரில் தையல் கடை நடத்தி வருபவர் அன்சாரி. இவர் தனது கடையின் மின் கட்டண பில்லை, யுபிஐ மூலம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இவருக்கு மின் கட்டண பில் வந்தபோது அதைப் பார்த்து அன்சாரி அதிர்ச்சி...
பெண் தொழிலதிபரை ஆடையை களைந்து அவமதித்ததால் தற்கொலை: பெங்களூரு பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்கு
admin - 0
கர்நாடகா போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிக்கபள்ளாப்பூர், தொட்டபள்ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவான நிலையில், அந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்களூருவில் உள்ள பத்மநாபா நகரை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜீவா (33) என்பவரிடம் போலீஸார்...
கடந்த 10 ஆண்டுகளில் 853 இந்திய வருவாய் துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்) விருப்ப ஒய்வை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: கடந்த 2014 முதல் 2024 வரை வருமான வரி துறையைச் சேர்ந்த 383 ஐஆர்எஸ் அதிகாரிகள், சுங்கம் மற்றும் மறைமுக வரி துறையைச் சேர்ந்த 470 ஐஆர்எஸ் அதிகாரிகள் என மொத்தம்...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வு குழு திருமலை, திருப்பதி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை விநியோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, முதலில்...
உ.பி.யில் உடைந்த பாலத்தில் இருந்து கார் ஆற்றில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். கூகுள் மேப் உதவியுடன் சென்றதால் இந்த விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
உ.பி.யின் பரேலி மாவட்டம் பரித்பூரில் ராம்கங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்தின் நடுப்பகுதி சமீபத்திய மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில் அந்த கார்...
தொழிலதிபர் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதானியிடமிருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானித்தோம். இதற்கு...
குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்டும்: சிறையில் உள்ள ரஷீத் எம்.பி. நீதிமன்றத்தில் மனு தாக்கல்
admin - 0
காஷ்மீரின் பிரிவினைவாத அரசியல்வாதி ஷேக் அப்துல் ரஷீத் (இன்ஜினியர் ரஷீத்). தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்த புகாரின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். மக்களவை தேர்தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்டும்” என டெல்லி முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்....
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயில் ரோப் கார் திட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு: போலீஸாருடன் மோதல்
admin - 0
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா என்ற இடத்தில் வைஷ்ணவ தேவி மலைக் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 80 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். வயதான பக்தர்கள் கோயிலுக்கு எளிதில் செல்வதற்காக இங்கு ரோப் கார் திட்டம் ரூ.250 கோடி...
குளிர்கால கூட்டத் தொடர் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்
admin - 0
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு கூடிய பிறகும், அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த விவகாரம், மணிப்பூர்...
சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்று தேசிய மாணவர் படையின் (என்சிசி ) தினமாகும். நானும் என்சிசி...









