திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.சரின் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் சரின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில காங்கிரஸ் பிரிவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட 3...
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்13-வது நாளை எட்டியது.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதிகிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில்...
புதுடெல்லி: ராமாயணம் இதிகாசத்தை இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார்.
அங்குள்ள வால்மீகி சிலையை வழிபட்டவர் பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் பார்வையிட்டார். அதிலும் காந்தியடிகள் 200 நாட்களுக்கு மேல் தங்கிய ஓர் அறைஅந்த கோயிலில் உள்ளது. அங்குகாந்தியடிகளின் பலவிதமானபுகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து...
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியை பலம் பெறச் செய்வதற்காக ஆம் ஆத்மி இம்முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. சமீபத்திய ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. ஹரியானாவில் முற்றிலும் தோல்வி அடைந்தாலும் ஜம்முவில் ஒரு தொகுதி கிடைத்தது. ஜம்முவின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர்...
பாலி மொழிக்கான செம்மொழி அந்தஸ்து புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை போற்றும்: பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது: தொன்மையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட உதவும். அதேநேரம், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி...
குண்டூர்: ஆந்திராவில் நேற்று 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அவர் மரண மடைந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ் (48). இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு பேருந்தில் பயணிகளுடன் புறப்பட்டார். பேருந்தில் சுமார்...
புதுடெல்லி: பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவை நேற்று புதுப்பித்தார்.
பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் நாளிலேயே 47 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கையில் 6 கோடி பேர் பதிவு செய்து கொண்டனர்.
உத்தர பிரதேசம்,...
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங் களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏ.ஜி. மசிக், ஏ.அமானுல்லா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது...
புதுடெல்லி: மும்பை அந்தேரியில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவிருப்பதாக கடந்த 2018-ல் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்தார். சல்மானை கொலைசெய்யும் லாரன்ஸ் கும்பலின்முயற்சி 2 முறை முறியடிக்கப்பட் டுள்ளது. மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான்கான் வசிக்கும்அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் ஏற்கெனவே மத்திய...
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளுக்கு மூன்றுகட்டங்களாக நடைபெற்ற பேரவைதேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்றன. இந்நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஆம் ஆத்மியும் கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்ததால் அந்தக்...










