ஜம்முவின் கதுவா நகரில் வீட்டில் தீப்பற்றியதில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவதார் கிரிஷன் ரைனா (81). இவர் தனது குடும்பத்துடன் ஜம்மு பிராந்தியம், கதுவா நகரின் ஷிவ் நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல்...
ம.பி. சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று 'டீ கெட்டில்' எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். ம.பி.யில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் 'டீ கெட்டில்' உடன் வந்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கார் கூறுகையில்,...
‘‘நீதியின் அடையாளமாக கருதப்பட்ட செங்கோலை, ஊன்று கோலாக காட்சிக்கு வைத்திருந்தது காங்கிரஸ்’’ என மாநிலங்களவையில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ் கிண்டல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுதந்திரத்தின்போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகம் ஒன்றில் ஊன்று கோல் என குறிப்பிடப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. அந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் மையப் பகுதியில் நீதியின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது....
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு முதியோர் அனைவருக்கும் டெல்லி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னரே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, நேற்று முதியோர்களுக்கான புதிய அறிவிப்பை ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது: 60 வயதுக்கு...
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை, சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது வீர சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் கோரிக்கையை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில...
நெல்லூரில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் தொற்று என்பது கொசுக்களால் ஏற்படும் தொற்றாகும். இதனால் மூளை மற்றும் கண் பார்வை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்பினி பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு தலை மிக சிறியதாகவும், கண் பார்வைத்திறன் குன்றியும் பிறக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், மர்ரிபாடு மண்டலம்,...
உ.பி.யின் சம்பலில் ஜாமா மசூ தியை சுற்றியுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மின்சார திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, தீபா சராய் பகுதியில் 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் கோயில் திறக்கப்பட்டு அதில் வழிபாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹயாத் நகர் பகுதியிலும் ஒருகோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணா, அனுமர் சிலைகள் கொண்ட இக்கோயிலும் சுத்தம்...
​மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதி​ய​தில் 13 பேர் உயிரிழந்​தனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகே​யுள்ள எலிபென்டா தீவில் புகழ்​பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்​வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்​கரையி​லிருந்து படகு​களில் செல்வது வழக்​கம். சுற்றுலா பயணிகள் 100-க்​கும் மேற்​பட்​டோருடன், நீல்​கமல் என்ற...
சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசி​யதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்தன. அரசி​யலமைப்பு உருவாக்​கப்​பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’...