Google search engine
சென்னை: இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாட்டுக்கு கட்டுரைகளை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎப்) அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு மே 7 முதல் 9-ம்...
நாக்பூர்: இந்தியாவில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துத் தயாரிப்பு மையமாக நாக்பூர் திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும்ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிபொருள்கள் நாக்பூர் ஆலைகளிலிருந்து ஏற்றுமதியாகியுள்ளன. மேலும் ரூ.3,000 கோடிக்கு ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, ஸ்பெயின், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, போலந்து, வியட்நாம், பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் நாக்பூரிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கிசேமித்து வருகின்றன. இந்த நாடுகளிலிருந்து போரில்ஈடுபடும் நாடுகளுக்கு...
பெங்களூரு: இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பு ‘BIODYNAMIC ASSOCIATION OF INDIA’ (BDAI) அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இந்திய அளவிலான உயிர் சக்தி வேளாண் மாநாட்டை பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், ‘இந்தியாவின் வருங்கால உயிர் சக்தி வேளாண்மை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ளபல ஆராய்ச்சியாளர்கள், உயிர் சக்தி வேளாண் விவசாயிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு தங்கள்அனுபவங்களையும், அவர்களின்...
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் (எஸ்டிஎன்எம்) மருத்துவமனையில் அண்மையில் வயிற்றுவலி காரணமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை...
புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸின் மூத்ததலைவரான பாபா சித்திக் மும்பையில் கடந்த 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு சர்வதேச குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதைதொடர்ந்து, பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்ல லாரன்ஸ் கும்பல் குறி வைத்துள்ள விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் சிங்காரா மான்வேட்டையில் ஈடுபட்டது காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிஷ்னோய்...
கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்பகுதியை...
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும்சூழ்நிலை உருவானாலும் இந்தியாகூட்டணி வேட்பாளர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் 18-20 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரேநோக்கம். அதில் உறுதியாக உள்ளோம். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த...
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் கடற்படை கேப்டன் மிருதுல் ஷா (53). இவருடைய பெற்றோர் ஒரு வீட்டை 1966-ம் ஆண்டு விமானப்படை கேப்டன் ஹர்பால் சிங் என்பவர் ரு.100-க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். ஹர்பால் சிங் உயிரிழந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகள்(நீலம் சிங்) அங்கு தொடர்ந்து வசித்து வந்துள்ளனர். தாய் உயிரிழந்த பிறகு நீலம் சிங் வாடகைதாரராகி உள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து வெறும்100 ரூபாயை மட்டுமே வாடகை...
புதுடெல்லி:ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்வேயில் ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடல் தகுதி: அவர்களின் கடைசிஐந்து ஆண்டுகால பணி நடத்தைஅலசப்பட்டு,...
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான மிலன் நகரில் அண்மையில் நடந்தது. இதில் இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியா முன்னெடுக்கும் விண்வெளி ஆய்வு...