மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன் சேர்த்து அவர் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை வரும் நிதியாண்டுக்கு தந்துள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பொருளாதார செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, நுகர்வை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை தூண்டுதல், திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது....
மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித நீராடினார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் புனித...
இந்து மதத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அறங்காவலர் குழு உத்தரவு
admin - 0
இந்துக்கள் அல்லாத, இந்து மதத்தை மதித்து நடக்காத 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிக்கொண்டே, இதர மதத்தை ஏற்று, இந்து மதத்திற்கு கேடு விளைவிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி, பிஆர் நாயுடு தலைமையில்...
டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறைக்கு...
மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: நமது நாட்டின் பல்வேறு பகுதிகள், வங்கதேசத்துக்கு எல்லையாக அமைந்துள்ளன. இதனால் அந்த நாட்டிலிருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவல் எளிதாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்காக வங்கதேச எல்லையைச் சுற்றி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது 79% பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 864 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கும்...
மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகிலுள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மங்களா பாம்நேரே (48). இவரது மகன் உமேஷ் பாம்நேரே.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி மங்களாவுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரை நாரியல்கேடாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மகன் உமேஷ் சேர்த்துள்ளார்.
அப்போது மங்களாவுக்கு, மண்ணெண்ணை கொடுத்தால் பக்கவாத நோய் தீரும் என்று உமேஷிடம் யாரோ சிலர் அறிவுரை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், தாய்க்கு...
ஆந்திராவில் சுமார் 4 லட்சம் பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி உள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தற்போது பண்ணை கோழிகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் இப்போதைக்கு சுமார் 4 லட்சம் கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, கோழிகளிடம்...
தெற்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் அவரது மனைவியும், உறவினரும் காயமடைந்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் தீவிரவாதிகளின் உறவினர்கள் உட்பட தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள...
மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் முதலாமாண்டு மாணவர் ஒருவரை பேராசிரியர் திருமணம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பேராசிரியை தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவி்த்துள்ளார்.
கொல்கத்தாவில் மாநில அரசுக்கு சொந்தமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்ஏகேஏயுடி) உள்ளது. இங்கு அப்ளைடு சைக்காலஜி துறையின் தலைவராக பெண் பேராசிரியை உள்ளார். இவர் தனது துறையின் முதலாமாண்டு மாணவரை வகுப்பறையிலேயே...
மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று தண்ணீர் மூலம் பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று பரவியது. அங்கு இதுவரை 166 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு அங்கு ஏற்கெனவே 6 பேர் இறந்திருந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி...









