அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் 104 பேர் பஞ்சாப் மாநிலம் வந்தடைந்தனர்
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் முதல் கட்டமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்புகளில் இருந்து வெளியேறுவது, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவில் முறையான...
மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாராணசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள்
admin - 0
பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்துக் கொண்ட துறவிகளில் பலரும் வாராணசி, அயோத்திக்கு செல்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இதில் மகர சங்கராந்தி, மகா பவுர்ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்திரி என மொத்தம் 6 வகையான ராஜ...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் மூத்த குடிமக்கள் பங்கேற்பதற்காக அம்மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேசிய மெடிகோஸ் கூட்டமைப்பு மற்றும் அலிம்கோ ஆகியற்றுடன் உத்தர பிரதேச அரசின் சமூக நலத்துறை இணைந்து மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து வருபவர்களுக்காக 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமம் கும்பமேளா...
கேரளா அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
admin - 0
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ...
புதிதாக 10 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் முதுநிலை படிப்புக்கான இடங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இரங்கியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன....
சீன ஊடுருவல் குறித்து பேசிய ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: சபாநாயகருக்கு பாஜக எம்.பி.க்கள் கடிதம்
admin - 0
சீன படைகள் இந்திய மண்ணில் ஊடுருவியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்காக அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சபாநாயகரிடம் பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ராகுல் தனது உரையில் கொஞ்சமும் கூச்சமின்றி வரலாற்று மற்றும் ஆதாரப்பூர்வமான உண்மைகளை திரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், தாய்நாட்டை கேலி செய்து நமது குடியரசின்...
தேச நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். சீனர்கள் நமது எல்லைக்குள் இருப்பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும்...
1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: தெலங்கானா பேரவையில் முதல்வர் தகவல்
admin - 0
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
இதுகுறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என கடந்த 2024 பிப்ரவரியில் தீர்மானிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய கர்நாடகா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலங்கானாவில் தொடர்ந்து 50...
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று முன் தினம் காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி...
தலைநகர் டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம்...









