ஹைதராபாத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெலங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்தில் உள்ள கரகபட்லா எனும் ஊரில் போலி மருந்து தொழிற்சாலை இயங்குவதாக தெலங்கானா மாநில மருந்து கட்டுப்பாடு ஆணையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது, மல்காஜ்கிரி மாவட்டம், செர்லபல்லி பகுதியில் உள்ள மற்றொரு மருந்து தொழிற்சாலையின் பெயர்களால் தயாரிக்கப்படும் போலி நோய்...
சைபர் கிரைம் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி மும்பை ஐஐடி மாணவர் ஒருவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. எனினும் மும்பை பவாய் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பை ஐஐடியின் 25 வயது மாணவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்து தன்னை டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்)...
சமூக ஊடக தளங்களில் ஆபாச காட்சிப் பதிவுகளை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்குவது அவசியம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சமூக ஊடக தளங்களில் சட்டவிரோதமான முறையில் பாலியல் மற்றும் பாலியல் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்புவதை தடுக்க தற்போதுள்ள வழிமுறைகள் குறித்து மக்களவையில் பாஜக எம்.பி. அருண் கோவில் நேற்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், “சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள்...
இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை சப்ளை செய்து வரும் நாடாக தற்போது ரஷ்யா உருவாகியுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற எப்ஐபிஐ ஆயில் அன்ட் கேஸ் விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. 2022 பிப்ரவரி...
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது.
இந்திய கடற்படையை விரிவாக்கம் செய்வதற்காக, ‘திட்டம் 66’ என்ற பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோல ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வங்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது....
சம்பல் பகுதியில் ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ மகன் சர்ச்சை பேச்சு: 800 பேர் மீது வழக்குப் பதிவு
admin - 0
சம்பல் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில், ஆத்திரமூட்டும் வகையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்எல்ஏவின் மகன் ஆகியோர் பேசியுள்ளனர் என்று போலீஸார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 700 முதல் 800 நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) சென்றபோது...
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது. இந்த...
வக்பு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார்.
வக்பு வாரியங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அந்த திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு இந்த வக்பு மசோதாவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த...
அதானி மீதான புகாரில் திருப்பம்: அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை என குழுமம் விளக்கம்
admin - 0
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியது. அப்போது அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, அதானி விவகாரம், மணிப்பூர் நிலவரம்,...
சம்பல் மசூதி ஆய்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: ஜமாத் எ உலாமா ஹிந்த் வலியுறுத்தல்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியின் கோயில் இருந்தது என சம்பல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசாரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி மசூதியில் நடை பெற்ற ஆய்வு மீண்டும் கடந்த நவம்பர் 24-ம்...










