வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 79% நிறைவு

0
34

மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்: நமது நாட்டின் பல்வேறு பகுதிகள், வங்கதேசத்துக்கு எல்லையாக அமைந்துள்ளன. இதனால் அந்த நாட்டிலிருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவல் எளிதாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்காக வங்கதேச எல்லையைச் சுற்றி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது 79% பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 864 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதில் 174.5 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்க முடியாத வகையில் சாத்தியமற்ற கூறுகள் நிலவுகின்றன. நிலத்தை கையகப்படுத்துதல், எல்லையோரப் பாதுகாப்பு வங்கதேச அமைப்பின் (பிஜிபி) ஆட்சேபம், சதுப்பு நிலம், நிலச்சரிவு ஏற்படும் நிலம் போன்ற பிரச்சினைகளால் அங்கு வேலி அமைப்பதில் சிக்கல் உள்ளது.

வேலி அமைப்பதில் வங்கதேச அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எல்லை கடந்த தீவிரவாதத்தை வேரறுப்பதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here