மும்பையில் விநாயகர் சேவையில் ஒரு முஸ்லிம் குடும்பம் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்துக்கு முன் உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
மும்பையில் பி.பி. மார்க் பகுதியில் விநாயகர் சதூர்த்தியை வருடந்தோறும் கொண்டாட ராஜா கணேஷ் மண்டல் எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில், மதத்தை விட மனிதாபிமானத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த பி.பி மார்க்கில் ஒரு முஸ்லிம் குடும்பம் பல ஆண்டுகளாக விநாயகரின்...
மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். கடந்த 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடிக்கும் மேல் எனப் படிவத்தில் குறிப்பிட்டு, மாநிலத்தின் பணக்கார வேட்பாளராகக் களம்...
‘காங்கிரஸ் திட்டங்களை ட்ரம்ப் காப்பி அடிக்கிறார்’ – 5000 டாலர் வாக்குறுதி குறித்து டி.கே.சிவகுமார் விமர்சனம்
admin - 0
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உத்திகளையும் உத்தரவாதத் திட்டங்களையும் பார்த்துதான், பிற மாநிலங்களும் ஏன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கூடத் திட்டங்களைத் தீட்டி வருவதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் 'ட்ரம்ப் டிவிடெண்ட்' என்ற பெயரில் 5,000 அமெரிக்க டாலர்கள்...
உலகளாவிய போர்ப் பதற்றங்கள், வர்த்தகப் பூசல்கள் மற்றும் மேலைநாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே, டெல்லியில் 18-வது பிரிக்ஸ் 2026 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது.
இது வெறும் ‘சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு’ மட்டுமல்ல; மாறாக, ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தில் இந்தியாவின் உலகளாவிய ஆதிக்கத்தை பறைசாற்றும் நிகழ்வாகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு எப்போதுமே ஆட்படாது என்பதை தனது ‘ராஜதந்திர தன்னாட்சி’ கொள்கை...
‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அபாரமான வெற்றியை வழங்கி வரலாற்றுத் தீர்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த வெற்றியானது பொய்யின் எதிரொலிக்கு...
டெல்லியில் 18-வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை வந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வருவதால் பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 9-ம் தேதி புதன்கிழமையன்று ஏழுமலையானை மொத்தம் 69,771 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 25,888 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர்....
வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சத்துடன் ஓடிய மர்ம நபர் – 30 நிமிடத்தில் மடக்கிப் பிடித்தது போலீஸ்
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கிளை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளரைப் போல ஒரு நபர் வந்தார். அவர் சிவப்பு நிறகுர்தாவும், கருப்பு நிற பைஜாமாவும் அணிந்திருந்தார்.
அவர் நேராக கேஷ் கவுன்ட்டர் அருகே வரும்போது தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு, பையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வங்கி ஊழியர்கள் கண்ணில் தூவினார்....
‘செல்போன்களை பார்க்கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்லையா?’ – அதிகாரிகளை சாடிய முதல்வர் சந்திரபாபு நாயுடு
admin - 0
செல்போன்களை பார்க்கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்லையா? என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகளை சாடினார்.
அமராவதியில் 8-வது மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. 2-வது நாளாக நேற்று நடந்த மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மக்களின் பிரச்சினைகள், அதுதொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் இந்த வேளையில், சில துறைகளைச்...
பணிக்கு பணம் பெற்ற சர்ச்சை: காங். கட்சி பொறுப்பில் இருந்து உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் விலகல்
admin - 0
தனது உதவியாளர் பணிக்கு பணம் பெற்ற சர்ச்சை குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் விலகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று ஹரிஷ் ராவத்தின் உதவியாளர் சந்தன் சிங் ஜீனாவின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2016-ல் நடைபெற்ற மாநில அளவிலான ஆட்தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனையை அமலாக்கத் துறை...









