பிஎஃப் திட்டத்தில் மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன்மொழிவை ஏற்று, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச்...
வடக்கு அரபிக் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியது தொடர்பாக, அந்நாட்டு தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
வடக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலை நோக்கி பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று அதிக வேகத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில்...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்மோற்சவத்தின் பாகமாக உற்சவ மூர்த்தியான மலையப்பர், வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில், பாண்டுரங்கர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு சுவாமியை தரிசித்தனர்.
வாகன சேவைக்கு முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, அவற்றிற்கு பின் ஜீயர் சுவாமிகளும் அவரது...
“ஒவ்வொரு இந்தியர் மீதும் வரியை சுமத்திய பிரதமர்” – யுபிஐ கட்டணத்துக்கு ராகுல் எதிர்ப்பு
admin - 0
யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒருமுறை, “நீங்கள் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா” என்று கேட்கப்பட்டபோது, நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன்...
மும்பையில் தனது நிலத்தை அபகரித்ததாக பாஜக எம்எல்ஏ மீது பிரதமர் மோடியிடம், அவரது பள்ளித் தோழர் நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேஷி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்கரலி வோரா, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா வினோத் சர்மா மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரி புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர்...
பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான சன்மானத்தை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக பாகிஸ்தான் அரசு உயர்த்தி இருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுபோல தந்திரமாக ஏமாற்றுவது பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தானின் இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகளும் மக்களை...
‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக பெற்றுள்ள வெற்றி, “பொய்யின் எதிரொலிக்கு எதிரான சத்தியத்தின் வெற்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அபாரமான வெற்றியை வழங்கி வரலாற்றுத் தீர்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த வெற்றியானது பொய்யின் எதிரொலிக்கு...
‘பிஹார் வெள்ளத்தில் 49.67 லட்சம் மக்கள் பாதிப்பு’ – மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த காங். வலியுறுத்தல்
admin - 0
பிஹாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும் துயரத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு முழு வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் உற்பத்தியாகி பிஹாருக்குள் பாயும் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், பிஹாரிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிஹாரில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பாட்னா, போஜ்பூர், சரண், வைஷாலி, பகல்பூர், பெகுசராய்,...
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. இதில் முதலாவதாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு 11 கஜம் கத்வால் இரட்டை வேட்டி சாத்தப்பட்டது.சுவாமிக்கு வைர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்...
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 10 மாநகராட்சிகள், 51 நகராட்சி மன்றங்கள் மற்றும் 248 நகராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக நடைபெற்றன. செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு கட்ட தேர்தலிலும் மொத்தம் 74.05% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.
இவற்றில், பாஜகவுக்கு 4,179 மற்றும் காங்கிரஸுக்கு 3,613 வார்டுகள் கிடைத்துள்ளன. ஜெய்பூர், கோட்டா, உதய்பூர் மற்றும் பில்வாராவில் பாஜகவினர் அதிகம்...









