சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த மாதம் நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் சமீபத்தில் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் கேரள சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பினராயி விஜயனின் மகளும் முன்னாள் தகவல்...
ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகானெரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மாவட்டங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்...
அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை...
இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்ரீத் நேற்றே கொண்டாடப்பட்டது. வழக்கமாகப் பக்ரீத் சிறப்பு தொழுகையின் போது மசூதிக்குள் போதுமான இட வசதி இருப்பதில்லை. அதனால், மசூதிக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்தனர். தற்போது இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும். அதிக...
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கோகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மாநில தீவிரவாத தடுப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜராத் ஏடிஎஸ் படை அதிகாரிகள், கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர். அப்போது கடல் பகுதியில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அந்தக் கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடையுடைய...
சீனாவின் ஏகபோக ஆதிக்கத்துக்கு போட்டியாக அமெரிக்கா, இந்தியா இடையே முக்கிய தாதுக்கள் ஒப்பந்தம்
admin - 0
சீனாவின் ஆதிக்கத்துக்குப் போட்டியாக, முக்கிய தாதுக்கள் மற்றும் அரிய வகை தனிமங்கள் குறித்த கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேற்று கையெழுத்திட்டன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணத்தின் இறுதி நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற ‘குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ரூபியோ பங்கேற்றார். ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும்...
பிஹார் மாநிலத்தில் உள்ளூர் சுற்றுலா உள் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மூன்று மாதங்களுக்கு...
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக மறுக்கும் சித்தராமையா – தீவிர ஆலோசனையில் டெல்லி தலைவர்கள்
admin - 0
கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், டெல்லியில் கூட்டத்தில் சித்தராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு வருமாறு சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
நேற்று மாலையில் டெல்லியில் உள்ள இந்திரா பவனில்...
சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மாற்றங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத குடியேற்றம், ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றம், எந்தவொரு நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்குகிறது. இதைக் கருத்தில்...
திருமணத்துக்கு மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக கூறி ம.பி.யில் 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது
admin - 0
திருமணத்துக்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதியை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்கள் முகேஷ் பைரங்கி, சுனிதா தம்பதியினர். ஆனால், இவர்கள் பெரும்பாலும் வரன் பார்த்து தராமல் மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மிகப்பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போகிறோம் என்று கூறி 42...










