Google search engine
நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பலரும் பங்கேற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிச்...
நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரில் மகளிர் இடஒதுக்​கீடு மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா மீண்​டும் சமர்ப்​பிக்​கப்பட உள்​ளது. கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற சிறப்பு கூட்​டத்​தொடரில் இந்த 2 மசோ​தாக்​களும் மக்​களவை​யில் தோல்​வியடைந்​தன. ஆனால் இந்​த​ முறை, மம்தா பானர்​ஜி​யின் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி), உத்​தவ் தாக்​கரே​வின் சிவசேனா (யுபிடி) ஆகிய​வற்​றின் உட்​கட்​சிப் பூசல்​களும் தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வர் சரத் பவாரின் திடீர் மனமாற்​ற​மும் சாதக​மான நிலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இருப்​பினும், மூன்​றில் இரண்டு...
மும்​பை​யில் உள்ள ஒரு தங்​க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏது​மின்றி ஒரு மணி நேரத்​தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்​கள் சுருட்​டி​யுள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகு​தி​யில் ஒரு தங்​க நகைக் கடன் நிறு​வனம் உள்​ளது. அதன் கடன் வழங்​கும் மென்​பொருள், வங்​கி​யுடன் நேரடி​யாக இணைக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிறு​வனத்​தில் வாடிக்​கை​யாளர்​களுக்கு கடன் ஒப்​புதலானதும், சிறப்பு மென்​பொருள் இணைப்பு மூலம் வங்​கிக்​குத் தானாகவே தகவல் சென்​று​விடும் வசதி இருந்​தது. இதைப் பயன்​படுத்​திய...
ஆந்​தி​ரா, கேரளா, கர்​நாடகா என தென்​னிந்​திய மாநிலங்​களில் கரோனா தொற்று தற்​போது மெல்ல பரவி வருகிறது. ஆந்​தி​ராவைப் பொறுத்​தவரை கடப்பா மாவட்​டத்​தில் ​தான் இத்​தொற்று மீண்​டும் பரவத் தொடங்​கியது கண்​டறியப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து நெல்​லூர், குண்​டூர், ஓங்​கோல், விசாகப்பட்டினம், காக்​கி​நாடா என மாநிலம் முழு​வதும் தற்​போது 22-க்​கும் மேற்​பட்​டோர் கரோனா தொற்​றால் பாதிக்​கப்​பட்​டு சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் கடப்​பா​வில் மட்​டுமே 8 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். குண்டூரில் 2 பேர், மற்ற...
மணிப்​பூர் மாநிலம் இம்​பால் மேற்​குப் பகு​தி​யில் எல்லைப் பாது​காப்​புப் படை வீரர்கள் சனிக்​கிழமை சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்​பவரை கைது செய்​தனர். அவரிட​மிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடை​யுள்ள செயற்கை போதைப்​ பொருள் (கிரிஸ்​டல் மெத்​த​ பெட்​டமைன்) பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, போதைப் ​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் சம்பந்தப்​பட்ட காவல் நிலை​யத்​தில்...
அமெரிக்​கா, சீனா​வைத் தொடர்ந்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​துள்​ளது. ‘விக்ரம்-1’ ராக்கெட் பயண வெற்​றியைத் தொடர்ந்​து, ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ நிறு​வனத்தின் இணை நிறு​வனர்​கள் பவன்​கு​மார் சந்​த​னா, நாகா பரத் தாகா ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது பிரதமர், “இந்​தி​யாவை நீங்​கள் பெரு​மைப்​படுத்தியுள்ளீர்​கள். நம் விண்​வெளி கனவு​கள் குறித்து பலர் சந்தேகம் எழுப்​பினர். ஆனால், விண்​வெளி​யில் இந்​தி​யா​வின்...
​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்​டு, சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் உள்​ளிட்ட பிரச்​சினை​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13-ம் தேதி வரை நடக்க உள்​ளது. நாட்​டில் உயர்​கல்​வியை நிர்​வகிக்க தனித்​தனியே செயல்​படும்...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை பெய்த கனமழை​யால் திடீர் வெள்​ள​மும் நிலச்சரி​வும் ஏற்​பட்​டன. இதில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தனர், மேலும் பலர் மாய​மாகி​யுள்​ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதையடுத்து நேற்று அதி​காலை​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் நிலச்சரிவும் ஏற்​பட்​டது. வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன....
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்​திய பிரதேச அமைச்​சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறி்த்து முதல்​வர் மோகன் யாதவ் கூறிய​தாவது: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்​கும்​போது ஒரு திரு​மணத்​திற்கு மட்​டுமே அனு​மதி உண்​டு. விவாகரத்து என்​பது சட்​டப்​பூர்வ நடைமுறை மற்​றும் நீதி​மன்ற தீர்ப்பு மூல​மாக மட்​டுமே செல்லுபடி​யாகும். மேலும், திரு​மணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்​ளது. குறிப்​பாக, லிவ்​-இன் உறவில் இருக்கும் தம்​ப​தி​கள் ஒரு மாதத்​திற்​குள் தங்​களைப் பதிவு செய்து கொள்ள வேண்​டும். இதற்கு...
நாட்​டின் 80-வது சுதந்​திர தின பாது​காப்பு ஏற்பாடுகளுக்​காக டெல்லி செங்​கோட்டை நேற்று முன்​தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்​படு​வ​தாக இந்​திய தொல்​பொருள் ஆய்வு துறை வெளியிட்​டுள்ள உத்​தர​வில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது. நாட்​டின் 80-வது சுதந்​திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்​படு​கிறது. டெல்​லி​யில் உள்ள செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து நாட்டு மக்களுக்கு உரை​யாற்​று​வார். இதற்​காக பிரம்​மாண்ட பாது​காப்பு ஏற்​பாடு​கள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன. டெல்லி செங்​கோட்டை...