டெல்லி முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசினர்.
இதுகுறித்து பவன் கல்யாணிடம் பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து 'என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?’ என...
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைத்து 2 வருடம் ஆகியும் பேராசிரியர் நியமிக்கப்படவில்லை
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கடந்த 2022 நவம்பரில் முதன் முறையாக காசி தமிழ் சங்கமம் (கேடிஎஸ்) நடைபெற்றது. இதை தொடங்குவதற்கு முன்பாக சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு வந்தது. இதனால் கேடிஎஸ் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, வாராணசியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) ஓர் இருக்கை அமைக்கப்படும் என அறிவித்தார்.
செப்டம்பர் 11, 2021-ல் மத்திய கல்வி துறையின் யூஜிசி, பிஎச்யூவுக்கு...
கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானாவின் ஜுலானா பகுதியில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்டால், பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். தந்தையின் பணி காரணமாக, குடும்பம் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் ரேகா குப்தா இணைந்தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு,...
கத்தார் மன்னரும், நாட்டின் அதிபருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை.
ஆனால் கத்தார் மன்னரை, பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றுள்ளார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கத்தார்...
அமெரிக்காவில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்த நிலையில் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் டெஸ்லா
admin - 0
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்து பேசிய நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், 40 ஆயிரம் டாலர்களுக்கு மேல் விலை...
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துளளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: நகர்ப்புற பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் இ்ந்த விகிதம் 6.5...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்: தேவஸ்தான அதிகாரி தகவல்
admin - 0
திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர் என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடு குறித்து அதன் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து கோயில்களை விட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் ஒரு...
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் முதல் முறையாக நக்சல் எதிர்ப்பின்றி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றதாக மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இது குறித்து முதல்வர் விஷ்ணு தியோ சாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக பஞ்சாயத்து தேர்தலுக்கு நக்சல் எதிர்ப்பு இல்லை....
பெண் நோயாளிகள் மருத்துவரால் பரிசோதிக்கப்படும் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தது தொர்பாக குஜராத் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குஜராத் மருத்துவமனை ஒன்றில் மூடிய அறைக்குள் பெண் நோயாளிகளை மருத்துவர் பரிசோதிப்பது தொடர்பான வீடியோ ஊடகத்தில் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகமதாபாத் காவல் துணை ஆணையர் (சைபர் கிரைம்) ஹர்திக் மகாடிடா நேற்று கூறியதாவது: சமூக ஊடங்களை நாங்கள் வழக்கமான கண்காணிப்பு மேற்கொண்டபோது இந்த வீடியோக்கள் எங்கள் கவனத்துக்கு...
கட்சிகள் தேர்தல் தோல்விக்கு ஆணையத்தின் மீது பழிபோடுவதை கைவிட வேண்டும்: பிரியாவிடை நிகழ்ச்சியில் ராஜீவ் குமார்
admin - 0
அரசியல் கட்சிகள் தேர்தலில் ஏற்படும் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துவதை கைவிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) ராஜீவ் குமார் நேற்று தெரிவித்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த ராஜீவ் குமார் நேற்றுடன் ஓய்வுபெற்றார். இந்த நிலையில், அவருக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியின்போது ராஜீவ் குமார் பேசியதாவது: அனைத்து வேட்பாளர்களும் கட்சிகளும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்கின்றனர் அப்படி...










