Google search engine
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர். குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது....
வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும்...
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில்...
கர்​நாட​கா​வின் தாவணகெரே மாவட்​டத்​தில் உள்ள‌ நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்​ளது. க‌டந்த ஆண்டு இந்த வங்​கி​யில் ரூ.13 கோடி மதிப்​பிலான 17.7 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்​கப்​பட்​டது. வங்​கி​யில் இருந்த சிசிடிவி கேம​ராக்​களை​யும் திருடிச் சென்​றனர். இதனால் குற்​ற​வாளி​களை உடனடி​யாக கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்​ளூர் குற்​ற​வாளி​களை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது உள்​ளூரை சேர்ந்த சிலர் அதில்...
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் ஈடுபடவும், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொருத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை...
வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொருத்து கூடுதல் நேரம்...
கடலோர பகுதிகளில் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடலோர பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை...
குஜராத் மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான வைர தொழிலாளர்கள் நேற்று மாபெரும் பேரணி நடத்தினர். உலக அளவில் வைர தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதுகுஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். வைரத்தை நறுக்குபவர்கள், பட்டை தீட்டுபவர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த துறையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் வைர தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக தொழிலாளர்களுக்கான ஊதியம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது...
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நிதி திவாரி நியமிக்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேசத்தின் வாராணசியை சேர்ந்தவர் நிதி திவாரி. முதலில் வாராணசி வணிக வரித் துறை துணை ஆணையராக அவர் பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து கொண்டே குடிமைத் பணித் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் நிதி திவாரி...
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் அரசு முறை பயணம் செய்தார். அப்போது சசி தரூர் கூறும்போது, “பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையும். நமது நாட்டுக்கு பல்வேறு நன்மைகள்...