Google search engine
முகம்மது ரஃபி பாடல்களை பாடும் திருச்சி சிவாவுக்கு பாஜகவின் இந்தி முழக்கம் வராதது எப்படி என அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது. மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது ‘சப்கே சாத் சப்கா விகாஸ் (அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி)’ எனும் பாஜகவின் இந்தி...
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமரை வரவேற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் உள்ள பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெர்தா, சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸா மற்றும்...
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்பார்த்ததை விட மத்திய அரசுக்கு ஆதரவு வாக்குகள் அதிகமாகின. இதன் பின்னணியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களில் இரு வேறு நிலைப்பாடு இருந்தது தெரிய வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வக்பு மசோதா 288 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது. இதன் மறுநாளான நேற்று இந்த மசோதா மாநிலங்களவையிலும் பிரச்சினையின்றி நிறைவேற்றப்பட்டது. நள்ளிரவு வரை நீண்ட விவாதத்திற்கு பின் எம்பிக்களுக்கான வாக்கெடுப்பு 2.30 மணிக்கு துவங்கியது....
அதிபர்கள் ட்ரம்ப், புதின், ஜெலன்ஸ்கி என உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா - சிலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட் 5 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தார். டெல்லி, ஆக்ரா, மும்பை, பெங்களூரு ஆகிய...
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் 9 மாதங்களுக்கு மேல் அங்கு தங்க நேரிட்டது....
நாடாளுமன்ற மக்​களவை​யில் வக்பு சட்​டத் திருத்த மசோதா நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்​திர முதல்​வரு​மான சந்​திர​பாபு நாயுடு, சட்ட வல்​லுநர்​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​யிருக்​கிறார். இந்​நிலை​யில் தெலுங்கு தேசம் கட்சி வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘வக்பு சட்​டத் திருத்த மசோ​தா​வில் உள்ள மற்ற அனைத்து திருத்​தங்​களை​யும் ஆதரிக்​கிறோம். ஆனால், மாநில வக்பு வாரி​யத்​தில் முஸ்​லிம் அல்​லாத ஒரு​வர் இடம்​பெற வேண்​டும்...
பிஹார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ)-ஐ பிஹார் மாநில அரசு இயற்​றியது. இச்​சட்​டத்​தின்​படி, மகா போதி கோயிலின் நிர்​வாக குழு​வில் பவுத்​தர்​கள் மற்​றும் இந்​துக்​கள் தலா 4 பேரை பிஹார் அரசு நியமிக்​கிறது. இக்​குழு​வின் நிரந்தர தலை​வ​ராக புத்த கயா மாவட்ட ஆட்​சி​யர் இருப்​பார்....
மக்களவையில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் சமாஜ்​வாதி எம்​.பி அகிலேஷ் யாதவ் இடையி​லான அரசி​யல் கிண்டலால் சிரிப்​பலை எழுந்​தது. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்​தின்​போது சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரும் எம்​.பி.​யு​மான அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “இந்த மசோதா நம்​பிக்​கையை கொடுக்​கும் என அமைச்​சர் கூறுகிறார். ஆனால் அது எப்​படி என்று ஆங்​கிலத்​தில் அல்​லது இந்​தி​யில் கூட என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை” என்​றார். அப்​போது அவை​யில் சிரிப்​பலை...
அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர்...
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது. ஆனந்த் அம்பானியின்...