பாரத மொழிகளை ஏற்பது நம் அனைவரின் பொறுப்பு; மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது: பிரதமர் மோடி
admin - 0
மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்றொரு மொழியை செழுமைப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பாரதத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது தாய் போன்றது. அந்த தாய் (மொழி) தனது குழந்தைகளுக்கு அறிவை போதிக்கிறாள். ஒரு தாய் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை....
2024 தேர்தலில் பாஜக வெற்றியை தடுக்க சதி? – இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த லஞ்சம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு
admin - 0
இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவை ஆண்ட முந்தைய ஜோ பைடன் அரசு விரும்பியது. அதனால்தான் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவி வழங்கியதாக கருதுகிறேன். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் தேர்தலின்போது வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு...
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று நடந்த பிரம்மாண்ட விழாவில் மாநில முதல்வராக ரேகாகுப்தா பதவியேற்றார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகைவழங்கப்படும். அடுத்த மாதம்8-ம் தேதி அவர்களது வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70...
விமானிகளுக்கு மின்னணு பணியாளர் உரிமம் (இபிஎல்) வழங்கும் பணியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இணைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு விமானப் போக்குவரத்து முதுகெலும்பாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 157 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான...
உ.பி. சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.8 லட்சத்து 8,736 கோடிக்கான இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பட்ஜெட்டில் சுமார் 22% வளர்ச்சி நோக்கங்களுக்காகவும் 13% கல்விக்காகவும் 11% விவசாயம் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்காகவும் 6% சுகாதாரத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். செயற்கை நுண்ணறிவு...
அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவத்தில் எஞ்சிய 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்களில் ஜனவரி 8-ம் தேதி ஒருவரின் உடலும் 11-ம் தேதி 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும்...
நேபாளத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக, பக்கத்து நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை மகா கும்பமேளாவில்...
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வெடிகுண்டு வைத்து கொல்லப்போவதாக நேற்று மிரட்டல் வந்தது.
இதுகுறித்து மும்பையில் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் இதன்மூலம் அவரை கொல்லப் போவதாகவும் மிரட்டல் வந்துள்ளது.
இது தொடர்பாக கோரேகான், ஜே.ஜே. மார்க் காவல் நிலையங்களுக்கும் மாநில அரசின் தலைமையகமான மந்திராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் காலையில் அழைப்புகள் வந்தன. இது தொடர்பாக...
சீக்கியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவரது ஜாமீனுக்கு எதிரான மனு பயனற்றது என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்தது....
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: தவுபால் மற்றும் இம்பாலின் கிழக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் உட்பட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சுரசந்த்பூரின் குகி தேசிய ராணுவத்தை சேர்ந்தவர். மூன்று பேர் தவுபாலில் உள்ள தடைசெய்யப்பட்ட கங்லிபாக்...










