Google search engine
ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான் 2 மணி நேர பயண​மாக நேற்று டெல்​லிக்கு வருகை வந்தார். ஈரான் அரசுக்கு எதி​ராக அந்த நாட்டு மக்​கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரு​கின்​றனர். இதில் 500 பாது​காப்பு படை வீரர்​கள், 4,500 பொது​மக்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். போராட்டக்​காரர்​களுக்கு ஆதர​வாக ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் திடீர் தாக்​குதல் நடத்​தக்​கூடும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்​டில் ஹவுத்​தி,...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள பண்டிட்கள் ஜனவரி 19-ம் தேதியை இனப்படுகொலை நாளாக அனுசரிக்கின்றனர். அந்த வகையில் 36-வது இனப்படுகொலை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று கூறும்போது, “காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் எப்போது வேண்டுமானாலும் (காஷ்மீருக்கு) திரும்பலாம். அவர்களை யாரும் தடுக்கவில்லை. இது அவர்களின் வீடு, எனவே அவர்கள் திரும்பி வர வேண்டும். எனினும்,...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லத்தேஹார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 80-க்கும் மேற்பட்டோருடன் சென்ற தனியார் பேருந்து மகுவாடானார் காவல் எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களா தாரா பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தப் பேருந்து பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமண விருந்தினர்களுடன் லத்தேஹார் மாவட்டத்தின் மகுவாடானார் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அம்பிகாபூர் மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை...
காங்​கிரஸ் எம்​.பி.ரேணுகா சவுத்ரி கடந்த மாதம் ஒரு நாயுடன் நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடருக்கு வந்ததால் சர்ச்சை ஏற்​பட்டது. இந்நிலை​யில், மத்​திய தொழிலக பாது​காப்பு படை​யின் (சிஐஎஸ்எப்) தலைமை இயக்​குநர் பிர​வீர் ரஞ்​சன் நேற்று செய்தியாளர்​களிடம் கூறுகை​யில், “செல்​லப் பிராணி​களுக்கு நாடாளு​மன்ற வளாகத்​திற்​குள் அனு​மதி இல்லை என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்​லை. எம்​.பி.க்​கள் வாக​னங்​கள் சோதனை​யிடப்​படு​வ​தில்​லை. செல்ல பிராணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த முயற்​சித்​து வருகிறோம்​” என்​றார்​.
இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின்போது அசாம் மக்களிடமிருந்தும் காங்கிரஸுக்கு ஒரு கடுமையான பதில் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாகான் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், இரண்டு புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தும் பேசிய பிரதமர் மோடி, "ஆட்சியை பிடிப்பதற்காகவும், வாக்குகளைப் பெறுவதற்காகவும் காங்கிரஸ் கட்சி அசாமின் மண்ணை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ்...
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த மகா காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சிங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் ரூ.830 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பாக நேதாஜி சுபாஷ்...
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு டெல்லி பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி பிராங்க் விடஸ் உமே என்ற நைஜீரிய இளைஞரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது கோகைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பிறகு நைஜீரியாவைச் சேர்ந்த சண்டே ஒட்டூ என்பவர் மெஹ்ராலி பகுதியில் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டிலும் எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன....
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: நமது முன்னோர்களிடம் இருந்து மிகச் சிறந்த ஆன்மீகப் பாரம்பரியத்தை இந்தியா பெற்றுள்ளது. துறவிகள் மற்றும் ஞானிகளிடம் இருந்து நாம் தொடர்ந்து வழிகாட்டுதல்களைப் பெற்று வருகிறோம். முழு பிரபஞ்சத்தையும் தர்மமே இயக்குகிறது; அனைத்தும் அதன் அடிப்படையில்தான் இயங்குகின்றன. இத்தகைய தர்மம் பாரதத்தை இயக்கும் வரை, இந்தியா உலகின் விஸ்வகுருவாக திகழும். உலகின் பிற நாடுகளிடம் ஆன்மீகம் இல்லாத காரணத்தால் இத்தகைய...
அ​சாமில் ரூ.6,957 கோடி மதிப்​பிலான காசிரங்கா உயர்​மட்ட வழித்தட திட்​டத்​துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் 2 அம்​ரித் பாரத் ரயில் சேவையை​யும் அவர் தொடங்கி வைத்​தார். பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று முன்​தினம் மாலை அசாம் மாநிலம் குவாஹாட்டி சென்​றார். கின்​னஸ் சாதனைக்​காக போடோ பழங்​குடி​யின கலைஞர்​கள் 10,000 பேர் பங்​கேற்ற பகுரும்பா நடன நிகழ்ச்​சியை பார்​வை​யிட்​டார். குவாஹாட்​டி​யில் உள்ள அரசு விருந்​தினர் மாளி​கை​யில்...
கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவதிலும், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்துவதிலும் காசி தமிழ் சங்கமத்தின் பங்களிப்பு முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை ஒற்றுமைக்கு காசி தமிழ் சங்கமம் முக்கிய எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார். பொங்கல் பண்டிகையையொட்டி 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் சமீபத்தில் சோம்நாத் சென்றபோது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின்...