தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்திய உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எஸ்ஐஆர், இவிஎம் முறையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடத்தப்பட்டு...
ஜந்தர் மந்தரில் 3 பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் துன்புறுத்தல்: காவல் துறை மீதான புகாரை குற்றப் பிரிவு விசாரிக்க உத்தரவு
admin - 0
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது, தங்களுக்கு டெல்லி காவல் துறையினர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் புகாரைப் பதிவு செய்ய டெல்லி காவல் துறை தயக்கம் காட்டிய நிலையில், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, மும்பை சிவாஜி பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி நடந்த இந்தப் போராட்ட மேடையில், அகிம்சை மற்றும் எளிமையை வலியுறுத்தும் மேற்கோள்களும்,...
விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டு இருந்தேன் என்று ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானத்தை துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி நடுவானில் கடத்த முயற்சி செய்தார். இந்த முயற்சியை இந்திய பைலட் ஸ்மித் மச்சார் தனது உயிரைப்...
‘புல்லடின் ஆஃப் தி அடாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீண்ட தூர ஏவுகணைகளுடன் இந்தியாவின் தற்காப்பு திறன் மேம்பட்டுள்ளது. இந்தியாவிடம் சுமார் 190 அணு குண்டுகள் இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
இருப்பினும், அணு ஆயுதங்கள் இருப்பது மட்டுமே போதுமானதல்ல; எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளும் அவசியமாகும். அந்த வகையில், இந்தியா சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளைக் கொண்டிருப்பதுடன், எதிரி நாட்டுக்குப்...
விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஏழைகளுக்கு பட்டாபிஷேகம்’ திட்டத்தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம்.
மத்திய அரசின் ஒத்துழைப்போடு நம்முடைய ஆட்சி வெற்றி நடைபோடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கியுள்ளோம். நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஜோகட்டேவில் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) ஆலை இயங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில் உள்ள கோக்கர் ஹைட்ரோட்ரீட்டர் (CHD) பிரிவில் உயர் அழுத்தத்தில் இயங்கிக்கொண்டிருந்த கோல்ட் செப்பரேட்டர் உடைந்ததால் நேற்று (புதன்கிழமை) மதியம் 12.30...
கணவரை கொலை செய்து ப்ளூ டிரம்மில் அடைத்த மனைவி, காதலர் குற்றவாளிகள் மீரட் நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
கணவரை குத்திக் கொலை செய்து ப்ளூ டிரம்மில் மறைத்த வழக்கில் மனைவி, அவரது காதலர் ஆகியோர் குற்றவாளிகள் என மீரட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் சவுரவ் ராஜ்புத். இவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி. முஸ்கானுக்கு சஹில் ஷுக்லா என்ற காதலர் உள்ளார். இந்நிலையில் தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த சவுரவை முஸ்கானும், சஹிலும் இணைந்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால்...
பட்டாசுக்கு முழு தடை விதிக்க முடியாது; சரவெடிகளை தயாரித்து விற்பனை செய்யலாம்: உச்ச நீதிமன்றம்
admin - 0
பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே அமர்வில் விசாரணைக்குவந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, ‘‘மாசு இல்லாத பட்டாசுகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, பட்டாசு தயாரிப்பு வழிமுறைகள் பல்வேறு மாற்றத்தை கண்டுள்ளன. எனவே, மாசு குறைந்த சிறிய ஷெல் வகையிலான மற்றும் சிறிய பைப் அடிப்படையிலான பட்டாசுகளை தயாரிக்க அனுமதிக்கலாம்....
பெங்களூருவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருடி தமிழகத்தில் விற்பனை செய்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 65 காலி சிலிண்டர்களும், ரூ.2.49 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் தனியார் காஸ் சிலிண்டர் ஏஜென்சி இயங்கி வருகிறது. கடந்த 13-ம் தேதி இரவு குடோனில் இருந்த 173 காலி சிலிண்டர்களை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மறுநாள் காலையில் வாகனத்தில் 74 சிலிண்டர்கள் காணாமல் போனதைக்...









