தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உத்தவ், ராஜ் தாக்கரே போராட்டம்

0
19

தலை​மைத் தேர்​தல் ஆணை​யருக்கு எதி​ராக மும்பையில் போராட்​டம் நடத்​திய உத்தவ் மற்​றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எஸ்ஐஆர், இவிஎம் முறையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தப் பணி​யில் (எஸ்​ஐஆர்) முறை​கேடு நடந்​த​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்​டியா கூட்​ட​ணிக் கட்சிகளின் சார்​பில் நாடு முழு​வதும் போராட்​டம், பேரணி நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அதன் ஒரு பகு​தி​யாக மகா​ராஷ்டி​ரா​வின் தலைநகர் மும்​பை​யில் சிவசேனா (உத்​தவ்) தலை​வர் உத்​தவ் தாக்​கரே மற்​றும் மகா​ராஷ்டிரா நவநிர்​மாண் சேனா (எம்​என்​எஸ்) தலை​வர் ராஜ் தாக்​கரே ஆகியோரின் தலை​மை​யில் நேற்று பிரம்​மாண்ட பேரணி நடத்​தப்​பட்​டது.

இந்​தப் பேரணி, மெட்ரோ சினிமா பகு​தி​யில் தொடங்​கி, தெற்கு மும்​பை​யில் உள்ள பிருஹன்​மும்பை மாநக​ராட்சி (பிஎம்​சி) தலை​மையகம் வரை சென்​றது. காங்​கிரஸ் மற்​றும் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி (சரத் பவார்) தலை​வர்​களும் பேரணி​யில் பங்​கேற்​றனர். இந்தப் பேரணி​யில் ராஜ் தாக்​கரே பேசும்போது, “மகா​ராஷ்டி​ரா​வில் நடத்​தப்​பட்ட எஸ்​ஐஆர் செயல்​முறையை முழு​மை​யாகக் கைவிட வேண்​டும்.

நாட்​டில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) மூலம் வாக்​களிப்​பதை நிறுத்​தி, மீண்​டும் வாக்​குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்​டும். யார் ஆட்​சி​யில் இருக்க வேண்​டும் என்​பதை தேர்​தல் ஆணை​யம் தீர்​மானிக்​கக் கூடாது. மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள்” என்​றார்.

உத்​தவ் தாக்​கரே பேசும்​போது, “ஞானேஷ் குமார் மக்​களின் வாக்​களிக்​கும் உரிமை​யையே பறித்​து​விட்​டார். தேர்​தல் செயல்​முறையை பாதிக்கும். எஸ்​ஐஆர் நடவடிக்​கையை முழு​மை​யாக ரத்து செய்ய வேண்​டும். எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யின் நோக்​கம் வாக்​காளர் பட்​டியலில் இருந்து வங்​கதேச ஊடுரு​வல்காரர்​களை அகற்​று​வ​தாக இருந்​தால், எத்​தனை பேரை கண்​டு​பிடித்​தீர்​கள்?” என்​று கேள்​வி எழுப்​பி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here