அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது; பைலட் மாயம்

0
179

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகளை இந்திய விமானப் படை அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் அந்த விமானம் அசாம் மாநில கார்பி அங்கிலாங் அருகிலுள்ள சோக்கி ஹோலா என்ற இடத்தில் நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போர் விமானத்தை இயக்கிய பைலட் மாயமாகியுள்ளார் என்று குவாஹாத்தியிலுள்ள பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அவரைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here