ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஒரு இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.
புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போமை பகுதியில் உள்ள முகாம் செர்ஹார் வனப்பகுதியில் காவல் துறை தேடுதல் நடத்தியது. அங்கிருந்த இயற்கைக் குகையில், ஒரு பெரிய பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் பீப்பாயும்...
டெல்லியில் அக்டோபர் 10 அன்று நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது, டிடியு மார்க்கில் மாணவர்களைத் தாக்கியதாகவும் பெண்களைத் தள்ளி அடித்ததாகவும் கூறப்படும் வழக்கில், இந்து ரக் ஷா தளம் அமைப்பினர் எனக் கூறிக்கொண்ட 4 பேரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து இந்தக் கைது நடந்தது. வீடியோவில் மாணவர்கள் தாக்கப்படுவதும், பெண்கள் தள்ளப்படுவதும் தெரிகிறது. அருகில்...
ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கும் கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளார். இதனால், டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பேரணிக்கு முன்னதாக, இண்டியா கூட்டணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று அக்.12-ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு ராகுல் காந்தி...
கேரளம் மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிந்தனர்.
கேரளம் மாநிலம் கொச்சியில் உள்ள கைவினைப் பொருள் விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வரும் தேவிகா (21), கோபிகா (22), இஜாஸ் (21) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேநீர் அருந்த மோட்டார் சைக்கிளில் சென்றனர். தேநீர் அருந்திவிட்டு தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நெடும்பாசேரி அருகே உள்ள சாலையில் சென்றபோது, அதிவேகத்தில் வந்த...
அதானி சிமெண்ட் நிறுவனம், ‘ஜஹான் விஸ்வாஸ், வாஹன் சக்தி’ என்கிற பெயரில் நவராத்ரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை கொண்டாடங்களை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள கைமோர் சிமெண்ட் உற்பத்தி ஆலையில் 15,000 சிமெண்ட் மூட்டைகளைக் கொண்டு துர்கா தேவியின் உருவத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளது.
70 அடி உயரம், 70 அடி அகலத்தில் (4,900 சதுர அடி பரப்பளவு) 750 டன் எடை...
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பணிநீக்கம் செய்துள்ளது.
பல்கலைக்கழக உள் புகார்க் குழு அவர் தவறு செய்தவர் எனக் கண்டறிந்து கடுமையான தண்டனையைப் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், அகோய்ஜாம் மீது 11 மாணவிகள் பல்கலைக்கழக உள் புகார்க் குழுவிடம் பாலியல் தொல்லை...
‘அமெரிக்காவில் பணிபுரிவோர் இந்தியாவுக்கு திரும்பி வாருங்கள்’ – சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
admin - 0
கிரீன் கார்டு பெறுவதற்கான முக்கிய நடைமுறையான நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும். நாம் இந்தியாவைக் கட்டியெழுப்புவோம் என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசு, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை, நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டம் (Permanent Labour...
திருப்பதி ஏழுமலையானை இந்த புரட்டாசி 4-வது சனிக்கிழமையன்று தரிசிக்க, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தர்ம தரிசனம் செய்ய நேற்று 8 முதல் 10 மணி நேரம் ஆனது. இந்த புரட்டாசி மாதத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பலர் மஞ்சள் ஆடை உடுத்தி, கோவிந்த...
ஜந்தர் மந்தரின் போராட்டத்தின்போது டெல்லி காவல் துறையின் கூடுதல் துணை ஆணையரான (ஏடிசிபி) ஐஸ்வர்யா சிங் நடவடிக்கைகள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி உள்ளன.
மத்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறையின் ஒரு பெண் அதிகாரி எடுக்கும் நடவடிக்கையும் தற்போது வைரலாகி...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் டெல்லி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக...









