‘அமெரிக்காவில் பணிபுரிவோர் இந்தியாவுக்கு திரும்பி வாருங்கள்’ – சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அழைப்பு

0
23

கிரீன் கார்டு பெறு​வதற்​கான முக்​கிய நடைமுறையான நிரந்​தரத் தொழிலா​ளர் சான்​றிதழ் திட்​டத்​தில் இருந்து இந்தியா​வின் முன்​னணி ஐ.டி. நிறு​வனங்​களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்​துள்ள நிலை​யில், அந்​நாட்​டில் பணியாற்​றும் இந்​தி​யர்​கள் தாயகம் திரும்ப வேண்​டும். நாம் இந்தியாவைக் கட்​டி​யெழுப்​புவோம் என்று சோஹோ நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

அமெரிக்க அரசு, டிசிஎஸ், விப்ரோ உள்​ளிட்ட இந்​தி​யா​வின் முன்னணி தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களை, நிரந்​தரத் தொழிலா​ளர் சான்​றிதழ் திட்​டம் (Permanent Labour Certification Programme – PERM) எனப்​படும் நடை​முறை​யில் இருந்து இடைநீக்கம் செய்​துள்​ளது. அமெரிக்​கா​வில் நிறு​வனங்​களின் ஆதர​வுடன் கிரீன் கார்டு பெறு​வதற்​கான முக்​கிய அம்​ச​மாக இந்தத் திட்​டம் கருதப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்​கா​வில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள் நாடு திரும்பி இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்​குப் பங்​களிக்க வேண்​டும் என்று சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் தர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “அமெரிக்​கா​வின் தொழில்​நுட்ப வலிமைக்கு இந்​தி​யர்​கள் பெரும் பங்​களிப்​பைச் செய்​துள்​ளனர். இருப்​பினும், அமெரிக்​கா​வின் கணிச​மான மக்கள் இனி நம்மை விரும்​ப​வில்​லை.

அமெரிக்​கா​வில் விசா மூலம் வசிப்​பவர்​கள், தங்​களது கடின உழைப்​பால் உரு​வாக்​கிய வாழ்க்​கையை விட்​டு​விட்டு வேறு இடத்​துக்​குச் செல்லவேண்​டிய வேதனை​யான சூழலை எதிர்கொள்கின்றனர். ஒரு துணிச்​சலான புதிய எதிர்​காலம் பிறப்​ப​தற்​கான வேதனை​யாக இதைக் கருது​வோம். திரும்பி வாருங்கள், நாம் இந்​தி​யா​வைக் கட்​டி​யெழுப்​புவோம். அமெரிக்கா​வில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​புவதற்கு இதுவே சரி​யான தருணாம்” என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்​துள்​ளார்.

அமெரிக்க தொழிலா​ளர் துறை அமைச்சர் கீத் சோண்​டர்​லிங் கூறுகை​யில், “டிசிஎஸ், விப்ரோ உள்​ளிட்ட இந்​தி​யா​வின் முன்னணி தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களின் புதிய நிரந்​தரத் தொழிலா​ளர் சான்​றிதழ் விண்​ணப்​பங்​களை நாங்​கள் ஏற்க மாட்டோம். ஏற்​க​னவே நிலு​வை​யில் உள்ள விண்​ணப்​பங்​கள் நிராகரிக்கப்படும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here