Google search engine
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப்...
பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: “உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக...
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்’ சென்னையில்...
“பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது....
என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய...
‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்....
‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது. தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து...
சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி...
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற...