நயன்தாரா – கவின் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.
விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் – நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில்...
‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு வில்லன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் ஆண்டரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால்,...
பண்பாடு, கலாச்சாரம், அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பான ‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள ‘இட்லி கடை' தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாச்சாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக,...
இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் இயக்கிய காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஒரே வாரத்தில் இதன் வசூல் ரூ.379 கோடியை எட்டியது. இந்தி படத்தின் வசூல் கடந்த புதன்கிழமை ரூ100 கோடியை கடந்தது. தெலுங்கு பதிப்பின் வசூல் இது வரை ரூ.60 கோடிக்கு மேல் உள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட படங்களும் ரூ.20 கோடிக்கு மேல்...
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன், 1944-ம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும். முப்பது மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தியாகராஜ பாகவதர், தனது நெருங்கிய நண்பர்களையும் விருப்பமாகச் செல்லும் இடங்களையும் தவிர்த்துவிட்டு, கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினார். ஆன்மிக நாட்டம் அதிகமானது அவருக்கு.
தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர், இந்த வழக்கு விவகாரத்தால் மங்கிய தனது புகழை, அடுத்த படம்...
அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர்.
வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார்...
கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘மவுனம்’.
அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர் ரித்திக், சுமன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. அக். 20-ல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
“கரோனா...
‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’.
இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மிஸ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் ரஜினி கிஷன் தயாரித்துள்ளார்.
ஊரை விட்டு ஓடிப்போகும்...
‘கோமாளி’, ‘பி.டி. சார்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்பட பல படங்களை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருபவர், ஐசரி கே கணேஷ். இப்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘கட்டா குஸ்தி 2’, ‘டயங்கரம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’...
ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசை அமைத்திருக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது: நமது வாகனங்களுக்கு பெட்ரோல்,...









