Google search engine
பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது...
தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது...
சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி - ஜி.வி.பிரகாஷ்...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. இதற்காக...
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது. அப்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக...
பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா 2’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீஸார் சோதனை நடத்த இருந்தனர். இந்த விஷயம் தெரிந்த ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில்...
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோடு’ படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், அடுத்து நடித்துள்ள படம், ‘என் காதலே’. பிரிட்டிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் நாயகிகளாக நடித்துள்ளனர். காட்பாடி ராஜன், மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி சாண்டெல்லோ இசை அமைத்துள்ளார். ஸ்கை வாண்டர்ஸ்...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்...
‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்க முடியாது. இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாகி விட்டது. மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை நீங்கள் எடுத்து, அதை...
ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19)...