தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், கான்ஜூரிங் கண்ணப்பன் என பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நாளை (பிப்.06) வெளியாகும் இந்தப் படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக முதலில் இயக்குநர் மகிழ் திருமேனி அழைத்தார். கதை கேட்டேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைத்தார்கள். நான்...
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணி...
பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவில் 1960, 1970 மற்றும் 80 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா. 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே பார், ஆலயமணி, வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, ராஜபார்ட் ரங்கதுரை, ஆயிரம் ஜென்மங்கள், கல்யாண ராமன் என...
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்தியன் என்பதை நம்பாமல் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு ஒன்றுக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அப்போது விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நான் இந்தியன் என்பதையும், எனது இந்திய பாஸ்போர்ட்டையும் அவர்கள் நம்பவில்லை. என்னைப் பதிலளிக்க விடாமல் கேள்வி கேட்டுக்...
மணிகண்டன், ஷான்வே மேக்னா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம், ஜன.24-ல் வெளியானது. சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்த இந்தப் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை அமைத்திருந்தார்.
இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. 10 வருடத்துக்கு முன்...
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இதில் அவருடன் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகியுள்ள இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்குகிறது. இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக இயக்குநர்...
மறைந்த டேனியல் பாலாஜி நடித்துள்ள படம், ‘ஆர்பிஎம்’. பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ள இதில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்துள்ளார். இதை கோல்டன் ரீல் இன்டர்நேஷனல் புரொடக் ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார்.
படம் பற்றி பிரசாத் பிரபாகர் பேசும்போது, 'டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது....
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசைத்துறைக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி...
பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே, சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட சடங்குகள் சென்னையில் நடைபெறுகிறது. இருவரது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர். இந்தப்...
பல்வேறு படங்கள் மூலம் அறியப்பட்ட துணை நடிகர் ஜெயசீலன் காலமானார். அவருக்கு வயது 40.
’தெறி’ படத்தில் விஜய்யுடன் குழந்தைகள் ரைம்ஸ் பாடச் சொல்லும் காட்சியில் தவறாக பாடி அடி வாங்கும் காட்சியில் நடித்தவர் ஜெயசீலன். அப்படத்தின் மூலம் அனைவராலும அறியப்பட்டவர். சில தினங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை தீவிரமானதால் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த...










