பல்வேறு படங்கள் மூலம் அறியப்பட்ட துணை நடிகர் ஜெயசீலன் காலமானார். அவருக்கு வயது 40.
’தெறி’ படத்தில் விஜய்யுடன் குழந்தைகள் ரைம்ஸ் பாடச் சொல்லும் காட்சியில் தவறாக பாடி அடி வாங்கும் காட்சியில் நடித்தவர் ஜெயசீலன். அப்படத்தின் மூலம் அனைவராலும அறியப்பட்டவர். சில தினங்களாகவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மஞ்சள் காமாலை தீவிரமானதால் படுத்த படுக்கையாகவும் இருந்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 40. ஜெயசீலனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருடைய இறுதிச் சடங்கும் நாளை காலை புது வண்ணாரப்பேட்டையில் நடைபெறுகிறது. இவர் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
‘தெறி’ படம் மட்டுமன்றி ‘புதுப்பேட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘பிகில்’ படத்திலும் அனைவரும் அறியப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.